2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவிட்டிருந்தார், அவர் தெரிவித்ததாவது, TANGEDCO ‘வின் அனல் மின் நிலையங்களிலுள்ள நிலக்கரியின் உண்மையான கையிருப்பு, பதிவேட்டு கணக்கு மற்றும் கையிருப்பு வேறுபாடுகளை ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிய, 02.08.2021 அன்று உயர் மட்ட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. 31.03.2021 வரையிலான கணக்கின் அடிப்படையில்,
வடசென்னை அனல் மின் நிலையத்தில் மட்டுமே, ரூ 85 கோடி மதிப்பிற்குரிய, 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் இருப்பது உயர் மட்ட ஆய்வுக் குழுவால், ஆகஸ்டு 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற்ற ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது வடசென்னை அனல் மின் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உரிய விசாரணைகள் நடைபெறும். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது, மாண்புமிகு முதல்வரின் மக்கள் நல அரசு, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
இதற்கு பிரபல எழுத்தாளர் மாரித்தாஸ், திமுக ஆட்சிக்கு வந்த 100நாளில் முக்கிய சாதனை மின்வாரியத்திலிருந்து 2லட்சம் டன் நிலக்கரி காணவில்லை. தகவல் கசிந்ததும்;திமுக அமைச்சர் நிலக்கரி காணவில்லை என்று இன்று பேட்டி கொடுக்கிறார். அது சுமார் 20நாள் தேவையான நிலக்கரி , தினமும் update செய்ய வேண்டிய தகவல் திடீர் என எப்படி மாயம்? என சமூக வலைதளத்தில் மரித்தாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவீட்டர் பக்கத்தில், அன்பு தம்பி, 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது அதிமுக ஆட்சியில். இது மார்ச் 2021 வரையிலான கணக்கு. அறமும், ஒரு செய்தியின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்கக்கூடிய அடிப்படையான அறிவுமில்லாதவர்கள் தான், இல்லாததை இருப்பதாக White boardல் update செய்துக் கொண்டிருப்பார்கள் என மாரித்தாஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மாரிதாஸ் அன்பு அண்ணன் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்குத் தவறு செய்தது அதிமுக என்றாலும் அதிகாரி என்றாலும் பிடிச்சு உள்ள போடுங்கள் மக்கள் வரவேற்கிறோம். அப்புறம் அண்ணா whiteBoard தவறில்லை மாறி மாறி கட்சி தாவி footboard போடுவது தான் தவறு. அடுத்த whiteBoard வீடியோ பதிலளிக்கத் தயாராகவும் என மாரித்தாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.