சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா செயலாளராக இருந்து நிர்வகித்து வரும் ஆஸ்ரம் பள்ளி வாடகை பாக்கி விவகார குறித்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராககவேந்திரா கல்வி சங்கத்துக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு காலி செய்யாவிட்டால், கல்வி சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என அந்தப் பள்ளியை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக, ஸ்ரீராகவேந்திரா கல்வி அறக்கட்டளை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிண்டியில் ஆஷ்ரம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தைக் காலி செய்யாத விவகாரத்தில் நீதிமன்றத்தை லதா ரஜினிகாந்த் அவமதித்து விட்டதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறோம். கரோனா நெருக்கடி காரணமாகவும், நடப்புக் கல்வியாண்டு முடியாத காரணத்தினாலும் உடனடியாக அந்த வளாகத்தைக் காலி செய்ய முடியாது என்றும், ஏப்ரல் 2021ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வேண்டும் என்றும் ஏற்கெனவே நீதிமன்றத்தில் நாங்கள் கோரியிருக்கிறோம்.
மேலும், வாடகை, வரி என எந்த வித பாக்கியும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறோம். நாங்கள் சொன்ன காரணங்களையும், உறுதியையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 2021 ஏப்ரல் வரை காலி செய்ய அவகாசம் கொடுத்திருக்கிறது. மேலும், இந்த இடத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டாம் என்றும், புதிய இடத்தில் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
எனவே, லதா ரஜினிகாந்த் எந்தவிதமான நீதிமன்ற அவமதிப்பையும் செய்யவில்லை என்றும், அப்படிச் செய்ததாக வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை மட்டுமல்ல, எங்கள் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே பரப்பப்படுகின்றன. மாணவர்களின் நலனை மனதில் வைத்து சரியான இடத்தைத் தேடி வருகிறோம். நீதிமன்றத்தில் நாங்கள் கொடுத்த உறுதியின்படி செயல்படுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வாடகை பாக்கி இல்லை என்பதை லதா ரஜினிகாந்த் ஆதரத்துடன் தெரிவித்ததை தொடர்ந்து வாடகை இங்கே மூலபத்திரம் எங்கே. என்கிற ஹாஸ்டக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது, திமுகவுக்கு சொந்தமான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சை இரண்டு வருடங்கள் ஆக உள்ள நிலையில் இதுவரை திமுக தரப்பில் முரசொலி மூலபத்திரத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.
40 சீட் 120 கோடி வரை பேரம்.! ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன்-உதயநிதி சந்திப்பின் போது நடந்தது என்ன.? https://dinaseval.com/2020/12/actor-kamalhasan-and-udayanithi-stalin-meet-and-dicusses-with-formed-the-alaince-in-comming-asembly-election/