திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்ற பிரபல அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பின் அவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் தற்போது சிறையில் இருந்து வெளியில் வந்த கிஷோர் கே சாமி சிறையில் பட்ட சிரமத்துக்கு பின் இனி மூச்சு விடமாட்டர் என எதிர்பார்த்து கொண்டிருந்த திமுகவினர்க்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அந்த வகையில் சிறைக்கு செல்வதற்கு முன்பு கிஷோர் செயல்பட்டது போன்று அதே உத்வேகத்தில் திமுகவை விமர்சனம் செய்து நேற்று அவர் பேசியதாவது. என்னை கைது செய்து சிறையில் அடைத்ததால், திமுகவுக்கு என்ன பலன் அல்லது இந்த சமுதாயத்திற்கு என்ன பலன் கிடைத்தது என்பதை ஒவ்வொருவரும் கேள்வி கேட்க வேண்டும். என்னை இவர்கள் சிறையில் அடைத்து விட்டார்கள் என்றால் நான் விடுதலையான பின்பு ஸ்டாலின் வாழ்க என கூறப்போகிற ஆள் கிடையாது.
திமுக எதிர்ப்பு என்பது என் ரத்தத்தில் ஊறிப்போன ஒரு விஷயம், பிறகு நான் ஏன் ஸ்டாலின் வாழ்க! என சொல்ல போகிறேன், சரி நீங்க என் மீது போட்ட அவதூறு வழக்கு ஏதாவது ஒன்று நீதிமன்றத்தில் நிலைத்து நிற்குமா? என்றால் கிடையாது, இப்ப நான் ஸ்டாலின் நல்லவர், வல்லவர், அறிவுள்ளவர், உழைப்பால் உயர்ந்த உத்தமர் என இப்படி எல்லாம் நான் பேசி, இதற்கு நீங்கள் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்தால், அந்த நீதிபதி கண்ணை மூடிக்கொண்டு அந்த வழக்கை ஏற்றுக் கொள்வார்.
எனக்கு ஆயுள் தண்டனை கூட அப்படி பேசியதற்கு கொடுக்கலாம், ஆனால் நான் அப்படி பேசவில்லையே, நான் இருக்கின்ற உண்மையத்தான் சொன்னேன். நீங்க போட்ட அவதூறு வழக்கினால் எனக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அப்படியே நீங்கள் என் மீது மிகப்பெரிய அவதூறு வழக்கை பதிவு செய்து மிகச் சிறப்பாக உங்கள் பக்கம் வாதாடினால் கூட உச்சபட்சமாக என்னை ஒரு மூன்று ஆண்டுகள் நீங்கள் சிறையில் வைக்க முடியும்.
இதனால் தமிழக மக்களுக்கு என்ன பலன் கிடைக்கும்.?என்கிற இந்த கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கின்றதா, என்றால் கிடையாது. அப்படியானால் உங்களுடைய தனிப்பட்ட அரசியல் அரிப்புகளுக்கு, நீங்கள் அரசாங்க இயந்திரத்தை பயன்படுத்துகிறீர்கள். இப்போ ஸ்டாலின் பாக்கெட்ல இருந்தோ, உதயநிதி பாக்கெட்ல இருந்தோ, அல்லது சபரீசன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து புழல் சிலையிலிருந்து கிஷோர் கே சாமியை நீதிமன்றத்துக்கு கூட்டிட்டு வாங்க.
நாங்களே வக்கீல் போட்டு செலவு செய்கிறீர்கள் என்றால் யாரும் உங்களை கேள்வி கேட்கப் போவது கிடையாது. ஆனால் அரசாங்கப் பணம், அரசாங்க வக்கீல், நீதிமன்ற நேரம்,காவல்துறை பங்களிப்பு இத்தனைக்கும் இது விரயமாகிறது என்கிற கேள்வி எழுகிறது இதற்கெல்லாம் திமுகவிடம் இருந்து நேர்மையான பதில் வரும் என்றால் வராது என கிஷோர் கே சாமி பேசிய வைரல் வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.