உங்களுக்கு என்னதான்டா பிரட்சனை.? இதுக்கெல்லாம் இந்த அண்ணாமலை பயப்படும் ஆள் கிடையாது.? அண்ணாமலை IPS அதிரடி.!

0
Follow on Google News

அரவக்குறிச்சி பாஜக வேப்பாளராக போட்டியிடும் முன்னால் IPS அதிகாரி அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் மத்தியில் பேசிய போது, அண்ணாமலை மீது கேஸ் இருந்தது அந்த கேசுக்கு பயந்து போய் தான் பாஜகவில் இணைந்தார், அதனால் பாஜகவில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அண்ணாமலைக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கூறிவருகின்றனர், தொடர்ச்சியாக தொடர்ந்து உங்களுக்கு என்னடா பிரச்சனை.?

உங்களுக்கு என்னதான்டா பிரச்சனை.? தமிழ்நாட்டில் கருணாநிதி போன்று நான் ஊழல் செய்தேனா? கருணாநிதி சர்க்காரியா ஊழலில் சக்கரை வாங்குகிறார், அப்போது சர்க்கரை எங்கே என்று கேட்டபோது சர்க்கரையை எறும்பு தின்று விட்டது என்று கூறினார், சரி சர்க்கரையைத் தான் எறும்பு தின்று விட்டது. சக்கரை இருந்த சாக்கு எங்கே என்று கேட்டபோது கரையான் தின்று விட்டது என்று சொன்னார். அது மாதிரி ஊழல் செய்தேனா.?

கூவம் நதியை சுத்தம் செய்ய அரசு பணம் கொடுத்தது, ஆனால் அரசு அதிகாரிகள் கூவம் நதியை சுத்தம் செய்யப்பட்டதா என்று பரிசோதனை செய்ய சென்ற போது கருணாநிதி அங்கே செல்ல வேண்டாம், முதலை இருக்கின்றது உங்களை கடித்து விடும் என்று கூறினார். இதுபோன்று ஊழல் செய்தேனா? சர்க்காரியா கமிஷனில் கருணாநிதி எப்படி நெடுஞ்சாலையில் ஊழல் செய்தார், பாலம் கட்டுவதில் ஊழல் செய்தார், இவர் எப்படிப்பட்ட விஞ்ஞானபூர்வமான ஊழல்வாதி என்று சொல்கிறது, அதுமாதிரி செய்தேனா?

அல்லது அது மாதிரியா குடும்பத்திலிருந்து வந்தேனா? உங்களுக்கு என்னதான்டா பிரச்சனை? அரவக்குறிச்சியில் இருந்து நான் வெளியே சென்றுவிட வேண்டுமா? இங்கே உள்ள அரசியலில், உங்களுக்கு இஸ்லாமியர் பார்முலாவை உடைக்கக்கூடாது, பண அரசியலை உடைக்கக்கூடாது, ஓட்டுக்கு உங்களிடம் வந்து பிச்சை எடுக்க வேண்டும், ஒருத்தனும் வாழவே கூடாதா? தேர்தலுக்கு முதல் நாள் நீங்க 1000 ரூபாயை தூக்கிப் போட்டால் லட்டு மாதிரி நாங்க புடிச்சுகிட்டு உனக்கு ஓட்டு போட வேண்டுமா?

20 வருடமாக இப்படித்தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள், இதை யாரும் தட்டிக் கேட்கக் கூடாது, அப்படி தட்டி கேட்டால் தனிமனித தாக்குதல் நடத்தி அனைத்து இடத்திலும் பிரச்சாரம் செய்வீங்க, என்னதான் நடக்குது இந்த அரவக்குறிச்சியில், என் பின்னாடி மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் பத்திரிகைகளுக்கு பணத்தை கொடுத்து அண்ணாமலை தோற்று விடுவார் என்று செய்தி போடுவீங்க, போட்டுக்கங்க, ஆனால் தனிமனித தாக்குதல் ஏன் செய்கிறீர்கள்.

பிரதமர் மீது ஏன் தனிமனிதத் தாக்குதல் நடத்துகிறார்கள், அவர் ஊழல் செய்தாரா? நான் பிரதமரின் சிஷ்யன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் தேர்தலில் பள்ளப்பட்டியில் ஆள் செட் செய்து கள்ள ஓட்டு போடுவியா? போட்டுக்க.. அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் கிடையாது, இந்த இடத்தில் நான் சொல்லிக்கொள்வது என்ன நடந்தாலும் ஏப்ரல் 6ம் தேதி வரை அண்ணாமலை இங்கே நிற்பான் அதில் எந்த மாற்றமும் இல்லை ஒரு இன்ச் கூட நான் பின் செல்வதில்லை என பேசினார் அண்ணாமலை.