தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து பல மாறுபட்ட நிலவரம் வெளிவந்து கொண்டிருக்கையில், அதிமுக – திமுக இரண்டு காட்சிகளில் அடுத்தது யார் ஆட்சி அமைப்பது என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது, தனியார் தொலைக்காட்சி ஓன்று எடுத்த தேர்தல் பிந்தைய நிலவரத்தில் திமுக 135 தொகுதிகள் வரையும் அதிமுக 95 தொகுதிகள் வரை வெற்றி பெரும். திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறபடுகிறது.
இதனை தொடர்ந்து திமுக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபெக் நிறுவன ஊழியர்கள் மக்களிடம் எடுத்த கருத்து கணிப்பில், தேர்தல் முடித்ததும் அவர்களிடம் யாருக்கு வாக்களித்தார்கள் என கருத்துக்கள் கேட்கப்பட்டு, அவர்களுடைய தொலைபேசி என்னை பெற்று கொண்டு, மீண்டும் இரண்டு தினங்களுக்கு முன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதியதாக ஒருவர் பேசுவது கருத்துக்களை கேட்டு அவர் யாருக்கு வாக்களித்தார் என்று உறுதி செய்துள்ளனர்.
இப்படி ஐபெக் நிறுவனம் எடுத்த தேர்தலுக்கு பிந்தைய நிலவரத்தில், மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் திமுக கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உளவு பிரிவு எடுத்த ரிப்போர்ட்டில் கடும் இழுபறியில் உள்ள தமிழக தேர்தல் பிந்தைய நிலவரத்தில் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதே போன்று அதிமுக தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் ரிப்போர்ட்டில் அதிமுக – திமுக இரண்டு கட்சிகளுக்கும் தலா 90 தொகுதிகள் விதம் சம நிலையில் இருப்பதாகவும், மீதம் உள்ள 54 தொகுதிகள் கடும் இழுபறியில் இருந்து வருவதாகவும், ஆனால் இழுபறியில் உள்ள தொகுதிகள் அதிமுகவுக்கு சாதகமாக இருப்பதால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என சுனில் ரிப்போர்ட் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், என்கிற குழப்பம் நீடித்து வரும் நிலையில், திமுக – அதிமுக என இரண்டு கட்சி தலைமையும் அமைதியாக இருந்து வரும் நிலையில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கோடி கணக்கில் செலவு செய்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காத்திருக்கின்றனர்.