தமிழகத்தில் என்ன நடக்கிறதா.? வேடிக்கை பார்க்கும் அமித்ஷா…..மிக பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை..!

0
Follow on Google News

மத்திய அரசை ஒன்றிய அரசு என திமுக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசி வரும் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடந்த வேண்டும் என தமிழக பாஜக முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர், மேலும் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய பாஜக முக்கிய தலைவர் ஒருவர் திமுக பின்னால் இருக்கும் பிரிவினைவாதிகளில் தூண்டுதலின் பெயரில் திமுக மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இந்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுதுறை உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சகத்தை கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு தமிழகத்தில் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் உளவு துறை மூலம் முறையாக தகவல் செல்கிறதா.? அல்லது தெரிந்தும் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறாரா அமித்ஷா என்கிற கேள்வியை முன் வைக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

மேலும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் உட்பட பலர் படுகொலைக்கு காரணமான தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக சிலர் பகிரங்கமாக செயல்பட்டு வருவது நாட்டின் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. விடுதலை புலி இயக்க தலைவர் பிரபாகரனை திருச்சியை சேர்ந்த வினோத் என்கிற நபர் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து சாட்டை துரைமுருகன் என்பவர் தலைமையிலான ஒரு குழு பிரபாகரனை விமர்சனம் செய்த அந்த நபர் இருக்கும் இடத்திற்கு சென்று பிரபாகரனை விமர்சனம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் பிரபாகரன் குறித்து விமர்சனம் செய்பவர்கள் சமூக வலைத்தள கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு காவல் துறை முறைப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி உட்பட பலர் கொடுரமாக படுகொலை செய்த விடுதலைப்புலி இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக போலிசில் புகார் கொடுக்கும் அளவுக்கு. தமிழகத்தில் நிலைமை உள்ளதை அறியாமல் இருக்கிறதா மத்திய உளவு துறை. பாஜக இந்திய ஒற்றுமையினை வளர்த்து பிரிவினைவாதிகளை களையெடுக்கும் ஒரு இரும்பு கட்சியாக அறியபடும் நிலையில் இம்மாதிரியான விவகாரங்களை கூட கண்டுகொள்ளாமல் இருப்பதெல்லாம் அபத்தம் என்றும், அமித்ஷா மிகபெரிய தவறை செய்துகொண்டிருக்கின்றார், பாஜக இவ்விஷயத்தில் சறுக்கி கொண்டிருக்கின்றது என்பதுதான் நிஜம் என பரவலான குற்றசாட்டு எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.