7.5 சதவீதம் பற்றி உனக்கு என்னனு தெரியுமா.? பத்திரிகையாளரை வெளுத்து வாங்கிய எடப்பாடியர்.!

0
Follow on Google News

நீட் தேர்வை பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவின்பேரில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.

நீட் தேர்வால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து உள்ஒதுக்கீடாக 7.5 சதவீதம் அறிவித்து அதன் மூலம் 313 பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர். தமிழகத்தில் 8 லட்சத்து 41 ஆயிரத்து 251 பேர் பிளஸ்-2 படிக்கிறார்கள். இதில் 41 சதவீதம் பேர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள். அதாவது 3 லட்சத்து 44 ஆயிரத்து 451 பேர் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். 3 லட்சத்து 44 ஆயிரத்து 485 பேரில் கடந்த ஆண்டு 6 பேர் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர முடிந்தது.

நான் கிராம பள்ளியில் படித்தவன். கிராம மாணவர்களின் உணர்வுகளை உணர்ந்தவன். அதனால்தான் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கஷ்டத்தை உணர்ந்து தமிழக அரசு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளித்து உள்ளது. அதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்து உள்ளது. என தெரிவித்தார், இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர் இடைமறித்து. நீட் தேர்வில் தமிழக அரசின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் 7.5 சதவீத ஒதுக்கீடு பற்றி பெருமை பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்ப.

அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீங்கள் நிருபர் கேட்கும் கேள்வியை சரியாக கேட்க வேண்டும், பெருமை பேசுவதாக தவறாக கேள்வி கேட்க கூடாது,என்ன நங்கள் பெருமை பேசுகிறோம்.? 7.5 சதவீதம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா.?நீட் தேர்வு வருவதற்கு முன்பு அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்கள் என்று உங்களுக்கு கணக்கு தெரியுமா.? என கேள்வி எழுப்பிய நிருபரை வெளுத்து வாங்கிய முதல்வர்.நான் கிராமத்தில் இருந்து வந்தவன், ஏழை-எளிய மாணவர்களின் கஷ்டத்தை உணர்ந்தவன். அவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்காக நான் பெருமை கொள்கிறேன் என தெரிவித்தார்.