உங்களுக்கு என்ன தகுதி இருக்கு…ஸ்டாலினிடம் துணிந்து கேள்வி எழுப்பிய பெண்.! சுற்றி வளைத்த திமுகவினர்.!

0
Follow on Google News

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது, இதற்கு முன் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்கிற தலைப்பில் திமுக இளைஞராணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர், இதில் அரியலூர் அருகே உதயநிதி வாகனத்தை வழிமறித்த தாமாக தொண்டர்கள் சரமாரியாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, இவர்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என தப்பி ஓடினர் உதயநிதி.

இதே போன்று பாமக தொண்டர்களால் தயாநிதி மாறன் விரட்டியடிக்கப்பட்டார், ஏற்கனவே தூத்துக்குடி அருகே தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களால் கனிமொழி விரட்டியடிக்கப்பட்ட வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இந்நிலையில் திமுக முக்கிய தலைவர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே விரட்டியடிப்பு சம்பவம் நடந்து வரும் நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பெண் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார், அப்போது கூட்டத்தில் பங்குபெற்ற பெண் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஸ்டாலினால் பதிலளிக்க முடியவில்லை, தொடர்ந்து கேள்வி எழுப்பிய அந்த பெண்ணிடம் நீ எந்த ஊர் உனக்கு என்னால் பதிலளிக்க முடியாது, உன்னை அதிமுக அமைச்சர் வேலுமணி அனுப்பியுள்ளார் அதனால் உனக்கு பதிலளிக்க முடியாது என ஸ்டாலின் கூறினார்.

ஆனால் அந்த பெண் தொடர்ந்து கேள்வி ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பிய போது அங்கே இருந்த திமுகவினர் அந்த பெண்ணை சூழ்ந்து கொண்டனர், அப்போது திமுகவினர் அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்தபோது, என் மீது கைவைத்தால் மரியாதை கிடையாது என ஸ்டாலின் முன்னிலையில் திமுகவினரை எச்சரித்ததை தொடர்ந்து திமுகவினர் அந்த பெண்ணிடம் நெருங்கி செல்ல அஞ்சினர், பின் திமுக பெண் உறுப்பினர்கள் கேள்வி கேட்ட அந்த பெண்ணை வெளியேற்ற முற்பட்டபோது, ஸ்டாலின் ஒழிக.! திமுக ஒழிக.! என கோஷமிட்டனர்.

தொடர்ந்து அந்த பெண் வெளியேற்றப்பட்ட போது அங்கே இருந்த திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர், ஆனால் அவர்களிடம் இருந்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்றனர், இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும் கூட்டத்தில் இருந்து கேள்வி எழுப்பிய பெண்ணை வலுக்கட்டாயமா வெளியே அழைத்து செல்லும் போது, ஒரு பழமொழியை ஒழுங்கா சொல்ல தெரியாது, கூட்டல் கழித்தல் தெரியாது, சுதந்திரம் தினம், குடியரசு தினம் தெரியாது, இவருக்கு முதல்வராக என்ன தகுதி இருக்கு என கோஷமிட்டு வெளியில் சென்றது குறிப்படத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .

உங்களுக்கு என்ன தகுதி இருக்கு முதல்வராக.?ஸ்டாலினிடம் துணிந்து கேள்வி எழுப்பிய பெண் மீது தாக்குதலில் ஈடுப்பட்ட திமுகவினர்.