முக ஸ்டாலின் பதற்றத்துக்கு காரணம் என்ன .? வெற்றியை தீர்மானிக்கும் 54 தொகுதிகள் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்.!

0
Follow on Google News

கடந்த மூன்று தினங்களாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கையின் மூலம் வாக்கு இயந்திரத்தின் மீது எழுப்பப்பட்டு வரும் சந்தேகம், மேலும் தொடர்ந்து திமுக மூத்த தலைவர்கள் இதே போன்ற சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர், தேர்தல் முடிந்து ஒரு வாரம் வரை அடுத்தது திமுக ஆட்சி தான் என நம்பிக்கையில் இருந்த முக ஸ்டாலினின் கடந்த மூன்று தினங்களாக பதற்றமான சூழல் குறித்த பின்னணி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

வாக்குபதிவு நடைபெற்று கொண்டிருந்த அன்று, திமுக 180 முதல் 200 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என முக ஸ்டாலினிடம் திமுக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் 150 தொகுதிகள்,135 தொகுதிகள் என படி படியாக குறைத்து, இறுதியில் திமுக உறுதியாக வெற்றி பெரும் என தெரிவித்துவிட்டு விமானத்தில் பறந்துவிட்டார். ஆனால் அதிமுக தேர்தல் ஆலோசகராக இருக்கும் சுனில் தேர்தல் முடிந்து சுமார் 7 நாட்கள் தொடர் ஆய்வுக்கு பின் ஒரு ரிப்போர்ட் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளார்.

அதில் 234 தொகுதிகளில், அதிமுக 90 இடங்களிலும், திமுக 90 இடங்களிலும் உறுதியாக வெற்றி பெறுவதற்க்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றது. மீதம் உள்ள 54 தொகுதிகள் கடும் இழுபறியில் இருந்து வருவதாகவும், அந்த 54 தொகுதிகளிலும் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம், 200 முதல் 2000 வரை மட்டும் தான் உள்ளது, ஆனால் இழுபறியில் உள்ள தொகுதிகளில் 40 தொகுதிகள் வரை அதிமுகவுக்கு சாதகமாக உள்ளது, இதில் 30 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தேர்தலில் அதிமுக -திமுக இடையே கடுமையான போட்டி இருந்தாலும், சீமான், கமல்ஹாசன் , TTV தினகரன் என இந்த 3 ஆட்டக்காரர்கள் தேர்தல் களத்தில் பிரிக்கும் வாக்குகளை துல்லியமாக கணிக்க முடியாதது தான் இந்த இழுபறிக்கு காரணம் என தெரிவித்துள்ளார் சுனில், கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது அடுத்தது திமுக தான் ஆட்சி அமைக்கும் என முக ஸ்டாலினிடம் பலர் ரிப்போர்ட் கொடுத்த போது, அப்போது திமுக தேர்தல் ஆலோசகராக இருந்த சுனில் மீண்டும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் ஆனால் திமுக-அதிமுக இடையே உள்ள வாக்கு வித்தியாசம் மிக குறைவாக இருக்கும் என தெரிவித்திருந்தார்,

அவர் சொன்னது போன்றே 2016 தேர்தல் முடிவுகள் அமைந்தது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் குறித்த சுனில் ரிப்போர்ட் ஸ்டாலின் கவனத்துக்கு சென்றுள்ளது. மேலும் கடும் இழுபறியில் யார் அடுத்து ஆட்சியை பிடிக்க போவது என்பதை கணிக்க முடியாத ஒரு சூழல் உருவாகியுள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதில், இம்முறை அதிர்ஷ்டமும் கை கொடுக்க வேண்டும் என்று தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர், இது தான் கடந்த மூன்று நாட்களாக ஸ்டாலின் பதற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.