கடந்த 2016 மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக, நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்கட்சியாக அமர இருக்கிறது, இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றிக்கு கடுமையாக பாடுபட்ட பாஜக தொண்டர்கள், பாஜகவுக்கு வாக்களித்த மக்கள் அங்கே கடுமையாக தாக்க பட்டு உயிர் இழந்து வருகின்றார், பலர் உயிருக்கு பயந்து எங்கே செல்வது என தவித்து வருகின்றனர்.
1946-ஆம் வருட அக்டோபர் மாத மத்தியில் கல்கத்தாவில் நடந்த நவகாளி கலவரத்தில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களின் மனைவிகளும் மகள்களும் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு கற்பழிக்க பட்டனர், பல கிரமங்கள் தீக்கிரையாக்கப்பட்டு முற்றிலுமாக அழிந்தன. இன்று மேற்குவங்கம் எரிவதை போல் அன்று பன்மடங்கு எரிந்து கொண்டிருந்தது , அதோடு சேர்த்து பஞ்சாபும் எரிந்து கொண்டிருந்தது
நடந்த வன்முறையும், கற்பிழந்த பெண்களும் கணக்கற்றவை. ரத்த ஆறு இருபுறமும் ஓடிகொண்டிருந்தது. மாபெரும் வரலாற்று சோகம் அன்று அரங்கேறியது, அப்பொழுது இந்தியாவுக்கு ராணுவம் இல்லை, காவல் துறை கிடையாது, மக்களை பாதுகாக்க வேண்டிய அன்றை காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்தது, பாதிக்கப்பட்ட மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் கோவத்தில் அப்போது இருந்தனர்.
ஆனால் தற்போது சுதந்திர இந்தியாவில் பலமிக்க ராணுவம், காவல்த்துறை என வல்லமையுடன் இருக்கிறது. ஆனால் 75 வருடம் கழித்து சுதந்திர இந்தியாவில் அதே அளவில் நடக்கும் வன்முறைகளை மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது என்றால், காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கு என்ன வித்தியாசம் என பாதிக்கப்பட்ட மக்களை காக்க தவறிய பாஜக அரசுக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக்கு மௌனமாக இருக்கிறது மத்திய பாஜக.
தற்போது நடக்கும் மேற்கு வங்கம் கலவரம் குறித்து பிரபல அரசியல் விமர்சகர் கூறுகையில், பாஜக கட்சியை வளர்க்க மேற்கு வங்கம் சென்றிருக்க கூடாது, அப்படி சென்றுபின் பாஜக வளர்ச்சிக்கு பாடுபட்ட மேற்கு வங்க மக்களை பாதுகாத்திருக்க வேண்டும்.வங்கத்தில் அமைதி காக்கும் பாஜக, நாளை தமிழ்நாடு ,கேரளா, ஆந்திர போன்ற மாநிலக்களில் பாஜகவினர் தாக்கப்படும் போது எப்படி அவர்களை காக்கும்.பாஜக மேல் வைத்திருக்கும் மக்களின் நம்பிக்கை தற்போது பொய்க்க தொடக்கியிருக்கிறது.
குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி, அங்கே நடந்த கலவரத்தை அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தவர். காஷ்மீர் பயங்கரவாத குழுக்களை ஒழித்து அதிரடி காட்டிய பிரதமர் மோடி, 370 சட்ட நீக்கம் போன்று துணிச்சலாக செயல்பட்டார், ஆனால் இன்று நடக்கும் மேற்கு வங்க கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வராமல் அமைதியாக இருந்தால், இந்த கலவரம் மேலும் வெடித்து, நாடு முளுவதும் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என குரல் ஒலிக்க தொடங்கும் என தெரிவித்துள்ளார்.