டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினத்தில் அனுமதி மறுக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மறுக்கப்பட்டதாகவும், அதனால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அணிவகுப்பை தலைமை தாங்கி நடத்தி அதில் பங்கேற்றார் மதுரை கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன். இந்நிலையில் இந்த அணிவகுப்பு முழுக்கு முழுக்க தேசபக்தியை சார்ந்து இருந்ததால் இது கம்யூனிஸ்ட் கட்சியின் ஊர்வலம் தானா என்கிற சந்தேகம் பார்ப்பவர்களுக்கு எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்ததாவது, I am waiting Mr வெங்கடேசன்… மதுரையில் ஓர் ஊர்வலம் நடக்கிறது. அந்த ஊர்வலம் வ உ சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, வேலுநாச்சியார் ஆகியோரது திருவுருவப் படங்களை ஏந்தி குழந்தைகள் அவர்களைப் போல மாறு வேடமிட்டு தேச பக்தியுடன் உற்சாக முழக்கத்துடன் நடக்கிறது.
அந்த ஊர்வலத்தைப் பார்ப்பவர்கள் ”அட இது ஆர்எஸ்எஸ் ஊர்வலம் போல இருக்கிறது;;பாரதிய ஜனதா கட்சியின் ஊர்வலம் போல இருக்கிறது””என்று ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.. ஏனென்றால் தமிழக அரசியலில் இதுவரை வீரமங்கை வேலு நாச்சியாரையும் பிள்ளை அவர்களையும் சுப்பிரமணிய பாரதியையும் போற்றி ஊர்வலமாக வந்தவர்கள் எல்லாம் பாஜகவினரும் ஆர்எஸ்எஸ் காரர்கள் தான்…
அப்படி ஓர் ஊர்வலத்தை மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அதுவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் நண்பர் வெங்கடேசன் அவர்கள் நடத்தி உள்ளார்கள் என்பதை நினைக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சியின் தேசபக்தியை நினைக்கும்போது உள்ளமெல்லாம் பூரித்துப் போகிறது.. கையில் ஒரு காவி கொடியை ஏந்தி விட்டால் வெங்கடேசன் முழுமையான தேச பக்தராக மாறி விடுவார்… அதுவும் பாரதியாரின் திருவுருவப் படத்தில் அழகாக குங்குமப்பொட்டு….RSS தோற்றது போங்க…
மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய இந்துத்துவ ஊர்வலம் மயிர்க்கூச்செறியும் காட்சி.. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகள் செய்து கொண்டிருக்கிறோம்…. இனிமேலும் தொடர்ந்து செய்வோமே…. அதைச் செய்வதற்கு வெங்கடேசன் எதற்கு மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு செய்ய வேண்டும்?? ஒன்று புரிகிறது மார்க்சும் லெனினும் மாசேதுங்கும் கதைக்கு உதவாது என்று புரிந்துகொண்டு கழட்டி விட்டுவிட்டார்கள் காம்ரேடுகள்!!!
வெற்றி பெற்றிருப்பது இந்திய தேசியம் தான் ; கம்யூனிஸ்டுகள் சொல்லும் சர்வதேசியம் இல்லை என்று தெரிகிறது. ஊர்வலத்தில் மாறுவேடம் இட்டது குழந்தைகள் அல்ல மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். சபாஷ் வெங்கடேசன்!!! மிக விரைவில் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் டாக்டர் ஜி குருஜி ஆகியோரையும் நீங்கள் மரியாதையுடன் ஊர்வலமாக எடு த்துச் செல்லும் காலம் வரும்… காத்திருக்கிறேன்!!! I am waiting Mr வெங்கடேசன் என பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்..