திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த ஆட்சியை விட பல மடங்கு அதிகமாக லஞ்சம் வசூலிக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அணைத்து இந்திய மோட்டார் ட்ராஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் முருகன் வெங்கடாச்சலம் கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ளார், அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துளதாவது. கடந்த ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஊழல், வேக கட்டுப்பாட்டு கருவி ஊழல், ஆர்சி ஸ்மார்ட்கார்டு ஊழல் என போக்குவரத்துத் துறையை ஊழல் துறையாக மாற்றி பல்வேறு முறைகேடுகளை நடத்திய மூன்றாம் நிலை அலுவலரான DTC1 நடராஜன் இவர் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாக ஊழல் செய்வதற்காகவே பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இவரின் அலுவலக கோப்புகளை முறையே நேர்மையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால், இவர் தண்டனை கூறியவர் ஆவார். ஆனால் இவர் தற்போது அதே பொறுப்பில் கடந்த ஆட்சியை விட நூறு மடங்கு கூடுதலாக அதிகார பலத்துடன் அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களின் வலதுகரம் என்றும், மாண்புமிகு முதல்வர் குடும்பத்தாரின் பெயரைச் சொல்லியும் இவரின் தலைமையில் பேத்தி குப்பம் ராஜன், பூந்தமல்லி ரமேஷ், தாம்பரம் சுரேஷ், பூந்தமல்லியில் இருந்து ஊழல் புகாரால் மாறுதல் அடைந்த திருச்செந்தூர் ஆர்டிஓ சம்பத் குழுவினர் தமிழகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாதமாதம் பல லட்சம் லஞ்சம் வசூலித்து கடந்த ஆட்சியை விட 20 மடங்கு கூடுதலாக லஞ்சம் வசூல் செய்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள 142 ஆர்டிஓ அலுவலகத்திற்கும் மாதமாதம் A- பிரிவுக்கு 12 லட்சம், B-பிரிவுக்கு 10 லட்சம், C-5 லட்சம் எனவும் 20 செக் போஸ்ட்களில் Inner-க்கு 15 லட்சம், Outer- க்கு 10 லட்சம் தனி செக்போஸ்ட் 6 லட்சம் என டார்கெட் கொடுத்து ஒத்துக்கொள்ளாத அலுவலர்களை துறை ரீதியாக மெமோ என அச்சுறுத்தி மாதம் மாதம் சுமார் 40 கோடிக்கு மேல் லஞ்சம் வசூலிப்பு கொள்ளை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஆர்சி லைசென்சை ஸ்மார்ட் கார்டில் வழங்குவதற்கு 10 ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு RTO அலுவலகமும் டாப் அப் செய்து கொள்வது வழக்கம் இந்த கார்டு 142 அலுவலகத்திலும் சேர்த்து தினசரி லட்சக்கணக்கில் மாதம் தோறும் கோடிக்கணக்கான கார்டுகள் வழங்கப்படுகிறது, இதிலும் ஊழல் அதிகாரி நடராஜன் டாப் அப் செய்யும் போது ஒரு காட்டிற்கு ரூபாய் 2 விதம் வசூலித்து வருகிறார், இதில் மாத மாதம் சுமார் 2 கோடி வரை வசூலித்து கொள்ளை நடந்து வருகிறது.
ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக ஐந்து ரூபாய் மதிப்புள்ள இந்த கார்டை 200 ரூபாய் வசூலித்து கொள்ளலாம் என முறைகேடான உத்தரவு கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டு, அப்போது கார்டுக்கு 300 ரூபாய் 400 ரூபாய் என வசூலித்து கொள்ளை நடந்தது. ஆனால் இது தற்போது மேலும் கூடுதலாக 400 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை லஞ்சம் வசூல் கொள்ளை நடக்கிறது. மேலும் கடந்த ஆட்சியில் பேன்டன் நிறுவனம் பிரதிபலிப்பு ஸ்டிக்கர் விற்பனை ஸ்மார்ட் கார்ட் வழங்குதல் போன்றவைகளில் செய்த ஊழல்கள் தொடர்பாக தமிழக அரசு ஊழல் தடுப்பு சோதனை செய்து நடவடிக்கை மேற்கொண்டது.
ஆனால் அதே நிறுவனம் இந்த நிமிடம் வரை ஏழை எளிய பொதுமக்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி கடந்த ஆட்சியை விட கூடுதலான லஞ்சம் வசூல் செய்து கொண்டு வருகிறது. இது மட்டுமல்ல பணி மாறுதலுக்கு ஆடியோ மற்றும் ஆய்வாளர் பதவிக்கு செக்போஸ்க்கு ஒரு கோடி, A- பிரிவுக்கு 55 லட்சம், B-பிரிவுக்கு 35 லட்சம், C- பிரிவுக்கு 15 லட்சம் என வசூலித்துக் கொண்டு லஞ்சம் கொடுத்தவர்கள் பணி மாற்றி அமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
மேலும் இந்த ஊழல் புகார்களில் இருந்து நடராஜன் தப்பித்துக்கொள்ள அமைச்சரிடம் ஆசை வார்த்தைகளை கூறி அளவுக்கு அதிகமான ஆசையை தூண்டி தன் வசமாக்கி அடுத்ததாக தமிழகத்தில் உள்ள ஐந்து கோடி பழைய வாகனங்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத உயர் அச்சமில்லாத உயர் பாதுகாப்பு பதிவெண் பலகை பொருத்த வேண்டும் என்ற உத்தரவு, கேமரா உத்தரவு மேலும் பல உத்தரவுகள் வெளியிட்டு மெகா ஊழல் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.
மேலும் இந்த கட்டாய லஞ்சம் முறைகேடுகள் ஊழல்கள் குறித்து பல அதிகாரிகள் எங்களிடம் புகார் தெரிவித்து வருகிறார்கள். மேலும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பதவி ஏற்றபின் செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்து துறைகளும் எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும் என தெரிவித்தார்கள். இது எங்களது செவிகளுக்கு தேர்வு சுவையாக இருந்தது, ஆனால் இது ஒரு சில மாதங்களிலேயே கானல் நீராக பொய்த்துவிட்டது.
தற்போது எந்த ஆட்சியிலும் இல்லாத அளவில் கடந்த ஆட்சியை விட 20 மடங்கு கூடுதலாக லஞ்சம் வசூலிப்பு புதிய சதித்திட்டங்கள் கடந்த ஆட்சி ஊழல்கள் தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்கள் ஓட்டுனர்கள் மோட்டார் வாகன உரிமையாளர்கள் அச்சுறுத்தி புரோக்கர்கள் மூலம் கொள்ளை அடிக்கப்படுகிறது, இதனால் தமிழக அரசின் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள பேரன்பு நிலை மாறி அரசு பொது மக்களின் அதிருப்திக்கு உள்ளாகி வருகிறது.
எனவே மாண்புமிகு மக்களின் முதல்வர் அவர்கள் தமிழக போக்குவரத்துத் துறையில் நடைபெற்ற ஊழல்களை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு ஊழல்வாதிகள் ஊழல் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஊழல் நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்து விடுமாறு, போக்குவரத்து துறை தலைமை அலுவலகத்தில் நீதி விசாரணை நடத்துமாறும், கடந்த ஆட்சியில் ஊழல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து விடுமாறும் கேட்டுக் கொள்கிறோம் உடனடி நல்ல தீர்வு ஏற்படும் என நம்புகிறோம்.