கண்டு கொள்ளாத தமிழகம்.! உங்களுக்கு வெட்கமா இல்லையா ராகுல்காந்தி.? பேராசிரியர் கடும் தாக்கு.!

0
Follow on Google News

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகையின் போது உற்சாகமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட மதுரை அவனியாபுரம் வந்த ராகுல் காந்தி அங்கே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டார், ஆனால் கடந்த மதம் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கிடைத்த வரவேற்பு தமிழகத்தில் ராகுல்காந்திக்கு கிடைக்கவில்லை, அமித்ஷா வந்த போது வழியெங்கும் வரவேற்பு அளித்த தமிழக மக்கள் கூட்டத்தை பார்த்த அமித்ஷா உற்சாகத்தில் வாகனத்தில் இருந்து இறங்கி மக்களை பார்த்து கையசைத்து சிறிது தூரம் நடந்து சென்றார், அந்த அளவுக்கு வழியெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட ராகுல் காந்தி மதுரைக்கு வந்ததும் தெரியவில்லை போனது தெரியவில்லை என்கின்றனர், அவர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்த அவனியாபுரம் கிராம மக்கள், மேலும் இதற்கு முன் ராகுல்காந்தி தமிழகம் வந்த போது ராகுல் காந்திக்கு கூட்டணி கட்சிகள் வரவேற்பு அளிப்பது வழக்கம் ஆனால் இம்முறை திமுக உட்பட எந்த ஒரு கூட்டணி கட்சியும் ராகுல் காந்தியை கண்டு கொள்ளவில்லை.

ராகுல் காந்தி அவனியாபுரம் வந்த போது அதே இடத்தில் உதயநிதி ஸ்டாலின் இருந்ததால் தவிர்க்க முடியாத சூழல் காரணமாக இருவரும் சந்திக்க நேரிட்டது, ஆனால் கடந்த மாதம் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்த போது , தமிழக முதல்வர், துணை முதல்வர் என அமைச்சர் பட்டாளமே வரவேற்பு அளித்தது, மேலும் அமித்ஷா தமிழகம் வந்து திரும்பிய அடுத்த ஒரு வாரம் அனைத்து தொலைக்காட்சியிலும் அவர் தமிழகம் வந்து சென்றது பற்றி விவாதம் தூள் பறந்தது, ஆனால் ராகுல் காந்தி வந்தது பெருபாலான தொலைக்காட்சியில் பெட்டி செய்தியாக அடங்கி விட்டது.

இந்நிலையில் மதுரை வந்த ராகுல்காந்தி, தமிழ் கலாச்சாரத்தை பாஜக நசுக்கப் பார்க்கிறது என பேசியது குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசனிடம் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கேட்ட போது அவர் பேசியதாவது, ஒரு வேடிக்கையான குற்றசாட்டை ராகுல் கூறுகிறார், அவர் எப்போதும் வேடிக்கையாக பேசக்கூடியவர், குழந்தை மனம் படைத்தவர், தமிழர்களின் பெருமையான பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டை தடை செய்தது காங்கிரஸ் கட்சி என குற்றம் சாட்டிய பேராசிரியர்,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது முனைப்புடன் ஜல்லிக்கட்டை எப்படி தடை செய்தார்கள் என்றும், அதற்கு திமுக எப்படி ஒத்து ஊதியது என்றும் அனைவருக்கும் தெரியும். ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரையில் ராகுல் காந்தி வந்து தமிழக கலாச்சாரத்தை பாஜக சீர்குலைக்கிறது என்று பேசுவது ஆச்சரியமாக உள்ளது,இது கடுமையான கண்டனத்துக்குரியது, ஜல்லிக்கட்டை தடை செய்தது கட்சி காங்கிரஸ், அதை மீண்டும் கொண்டு வந்தது பாஜக மற்றும் அதிமுக, ராகுல்காந்தி ஜல்லிக்கட்டு பற்றி பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கு.? திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி ஜல்லிக்கட்டை தடை செய்தது, ஆனால் ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரைக்கு ஜல்லிக்கட்டை பார்வையிட வந்தது ராகுல்காந்திக்கு வெட்கமா இல்லையா.? என கடுமையாக தாக்கி பேசினார் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன்.