மம்தா முகத்திரையை கிழித்த மத்திய உள்துறை அமைச்சகம்..! பொய் சொல்லி அவமானப்பட்ட மம்தா பானர்ஜி..!

0
Follow on Google News

மேற்கு வங்கத்தில் அமைந்திருக்கும் தெரசாவின் அறகட்டளைக்கான வங்கி கணக்கை மத்திய அரசு முடக்கிவிட்டது இதனால் 22 ஆயிரம் பேர் பாதிப்பு என பரபரப்பை கிளப்பினார் மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி, அவர் தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘கிறிஸ்துமஸ் அன்று, மத்திய அரசு இந்தியாவில் உள்ள அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடங்கியுள்ளது.

இதனால் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகளின்றி தவித்து வருகின்றனர். சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளை சமரசம் செய்யக்கூடாது’’ என்று மம்தா பானர்ஜி தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியால் இயக்கப்படும் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கவில்லை என்றும்.

அந்த அமைப்பு தனது கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்குமாறு கோரி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு கடிதம் எழுதியதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் FCRA 2010 மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகள் 2011 இன் கீழ் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் டிசம்பர் 25 அன்று நிராகரிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு அந்த அறக்கட்டளை வங்கி கணக்கினை நாங்கள் முடக்கவில்லை, அவர்கள்தான் வெளிநாட்டு நிதி பரிவர்த்தனை தொடர்பாக உரிய விளக்கத்தை இன்னும் அறிவிக்காமல் வங்கி கணக்கினை முடக்கி வைத்திருகின்றார்கள், இது திருத்தபட்ட வெளிநாட்டு நிதிவிவகார சட்ட விவகாரம் என மத்திய உள்த்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. மம்தா பானேர்ஜி பொய் சொல்லி வசமாக மாட்டி கொண்டு நாடு முழுவதும் மிக பெரிய அவமானத்தை பெற்றுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து, மம்தா கதறிகொண்டிருந்தாலும் தெரசாவின் “மிஷனரிஸ் ஆப் சாரிட்டி” அமைப்பு இதுபற்றி வாயே திறக்கவில்லை, மேலும் கோவா சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ள மம்தா பானர்ஜி அங்கே பெரும்பான்மையாக இருக்கும் கிருஸ்துவ மக்களின் வாக்குகளை பாஜகவுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சி தான் மம்தா பானர்ஜியின் பொய்யான குற்றச்சாட்டுக்கு காரணம் என கூறப்படுகிறது.