உருட்டுக்கட்டையால் உதை வாங்குவதில் இருந்து தப்பிய உதயநிதி.! உருட்டு கட்டையுடன் வழிமறித்த தொண்டர்கள்..நடந்தது என்ன.?

0
Follow on Google News

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திருவாரூரில் தனது பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதில் இரு தினங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தொண்டர் ஒருவர் தான் கொடுக்க அந்த மனுவை உதயநிதி ஸ்டாலினை நோக்கி எரிந்ததில் அவர் முகத்தில் பட்டது, உடனே உதயநிதி ஸ்டாலின் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்த சம்பவம் நடந்தது சில தினங்களே ஆன நிலையில், மீண்டும் உதயநிதி ஸ்டாலினை உருட்டுக்கட்டையால் அரியலூர் அருகே வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் திருமானூர் பேசுவதாக இருந்தது. இதனால் அங்கே இருந்த மூப்பனார் அரங்க மேடை திமுகவினரால் உதயநிதி புகைப்படத்துடன் அலங்கரிக்கப்பட்டது.

இந்த அரங்க மேடை அரசு நிதியில் கட்டப்பட்டு இருந்தாலும், அந்த கிராம மக்கள் மறைந்த ஜி கே மூப்பனார் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்ததால் அந்த அரங்கத்திற்கு மூப்பனார் மேடை என்று உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் பெயர் சூட்டி இருந்தது, இந்நிலையில் திருமானூரில் சிறிது நேரம் தனது முகத்தை காட்டிவிட்டு சில நிமிடங்கள் மட்டும் உதயநிதி பேசுவதற்காக அந்த மேடை இருந்து மூப்பனார் அரங்கம் என்ற பெயரை திமுகவினர் அளித்துள்ளனர்.

இது திமுகவினரின் திட்டமிட்ட செயல் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர் இந்நிலையில் இந்த தகவல் காட்டுத் தீ போல் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவியது, இதன்பின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மற்ற இடங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் சென்று கொண்டிருக்கையில், இடையில் உருட்டுக்கட்டையுடன் கூடிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடியுடன் அக்கட்சியின் தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தை வழிமறித்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அவர்கள் உதயநிதி ஸ்டாலினை வாகனத்தை விட்டு கீழே இறங்கு என்று ஆக்ரோஷமாக சத்தமிட்டனர். பின் உதயநிதி உடன் வந்திருந்த கட்சி நிர்வாகிகள் அவர்களை தடுத்து நிறுத்தி உதயநிதியை தாக்குதலில் இருந்து பாதுகாத்தனர். இந்த சம்பவம் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உதயநிதி ஸ்டாலின் வாகனம் திடீரென ராக்கெட் வேகத்தில் அந்த இடத்திலிருந்து பறந்தது. இதனால் உருட்டுக்கட்டையால் உதை வாங்குவதில் இருந்து உதயநிதி அதிஷ்டவசமாக தப்பினார்.