வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் மற்றும் ஸ்டீபன் ஒரே பெண்ணை காதலித்தனர். கடைசியில் ஜெயக்குமாருக்கு காதல் கைகூட ஆத்திரத்தில் பிளேடால் வெட்டி தப்பியோடிய கல்லூரியில் இளைஞர். ஆவடி அடுத்துள்ள பங்காருபேட்டை கருமாரியம்மன் கோவில் பகுதியில் கொரியர் வேலை செய்து வரும் உதயகுமார் (21).
இவர் ஆவடிக்கு அடுத்துள்ள வெள்ளானூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதே பெண்ணை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரும் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருமே ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவியது. இந்தப் பெண்ணை யார் காதலிக்கிறார்கள் என்று இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் முற்றியுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் உதயகுமார் தனது காதலியுடன் பைக்கில் வீரபுரம் மெயின் ரோட்டில் சென்றுள்ளார். இதை பார்த்த ஸ்டீபனுக்கு பயங்கர அதிர்ச்சி. தன்னுடைய காதலியுடன் உதயகுமார் செல்வதைப் பார்த்த ஸ்டீபன் அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். கடைசியில் கையில் இருந்த பிளேடால் இருவரையும் வெட்டி விட்டு தப்பி ஓடினார்.
காயம்பட்ட இவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாரிடம் அந்த சம்பவத்தைப் பற்றி புகார் கொடுக்கப்பட்டது இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கல்லூரி மாணவனை ஸ்டீபனை தேடிக் வருகின்றனர்.