திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சின்ன கலையம்புத்தூர் சமத்துவபுரத்தை அய்யர். இவருக்கு விக்டோரியா என்ற மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணத்தினால் பிரிந்து வாழ்ந்து வந்தார் விக்டோரியா. விக்டோரியா மடத்திகுளத்தில் உள்ள அட்டை மில்லில் வேலை பார்த்து சமத்துவபுரத்தில் வசித்து வந்தார்.
விக்டோரியா வேலை பார்த்து வந்த அட்டை மில்லில் பத்மநாதன் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் பழனி அருகே பாப்பம்பட்டியை சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். விக்டோரியாவுக்கும் பத்மநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ள காதலாக மாறியது. பத்மநாதன் மனைவி தெரியாமல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு விக்டோரியாவுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை செல்வதாக கூறிவிட்டு சென்ற பத்மநாதன் விக்டோரியா வீட்டருகே ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். விக்டோரியாவும் தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டு இருந்தார். தகவல் அறிந்த எஸ்பி மற்றும் டிஎஸ்பி தலைமையில் போலீசார் இரண்டு சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வந்த போலீசாருக்கு அப்போது தான் உண்மை தெரியவந்தது. விக்டோரியாவுக்கு மற்றோரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. அந்த நபரை விக்டோரியா பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கர். சங்கர் தேடப்பட்டு வந்த நிலையில் பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சங்கரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், விக்டோரியாவுடன் பழகுவது குறித்து பத்மநாதனுக்கும் சங்கருக்கும் தகராறு ஏற்பட்டதில் சங்கர் தான் பத்மநாதனை கத்தியால் குத்திக் கொன்றார். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த விக்டோரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் சங்கரிடம் பழனி தாலூக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.