நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக – அதிமுக இடையில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் கடும் போட்டி இருந்தாலும், சிறிய கட்சிகள் ஒன்றிணைத்து கமல்ஹாசன் தலைமையில் ஒரு கூட்டணி, TTV தினகரன் தலைமையில் ஒரு கூட்டணி, நம் தமிழர்கட்சி தன்னிச்சையாக 234 தொகுதிகளில் போட்டியிட்டது, இதில் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் பிரிக்கும் ஓட்டுகள் அதிமுக -திமுக கூட்டணிகளுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில் தென் மாவட்டத்தில் அமமுக அதிமுக வாக்குகளை பிரிப்பது அதிமுகவுக்கு பாதகமாகவும், திமுகவுக்கு சாதகமாவும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைதேர்தலில் பார்க்க முடிந்தது, இதனை தொடர்ந்து சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்ததும் சில காலம் அமைதியாக இருந்த சசிகலா பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், அதே போன்று சட்டசபை தேர்தல் குறித்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் வரை TTV தினகரன் அமைதியாக இருந்து வந்தார்.
இதனை தொடர்ந்து அதிமுக – அமமுக இணைப்பு குறித்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டு வந்தது, அப்போது சசிகலா மற்றும் TTV தினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து முக்கிய தேசிய அரசியல் தலைவர் ஒருவர் ஈடுப்பட்டு வந்துள்ளார், இதற்கு சசிகலா மற்றும் TTV தினகரன் இருவரும் அதிமுக பதிலுக்காக காத்திருந்து வந்ததாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து மீண்டும் இவர்களை அதிமுகவில் இணைப்பதில் ஒ.பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்தாலும் எடப்பாடி உடன்படவில்லை.
தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் எடப்பாடி பிடிவாதமாக இருந்து வந்த நிலையில், TTV தினகரனிடம் இருந்து அதிமுகவில் இருந்து 13 தொகுதிகள் எனக்கு ஒதுக்க வேண்டும் அதில் நான் முன்னிறுத்தும் அம்மாமுகவில் உள்ள எனது முக்கிய நிர்வாகிகள் போட்டியிட அதிமுக சம்மதம் தெரிவிக்க வேண்டும், இந்த சட்டசபை தேர்தலில் இருந்து அமமுக கட்சி போட்டியிடாது, அமமுக நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவுக்கு தேர்தல் பணியை செய்வார்கள், நானும் அரசியலில் இருந்து விலகி கொள்கிறேன் என TTV தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உடன்பட வில்லை என தெரிகிறது. தொடர்ந்து அவர் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார், இதனை தொடர்ந்து சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார், பின் TTV தினகரன் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு சட்டமன்ற தேர்தல் பணியை தொடங்கினர், மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இறுதி நேரத்தில் அமமுக உடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிடுவது அதிமுக வாக்குகள் பெருமளவில் பிரியும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும் அது எந்த அளவுக்கு அதிமுகவுக்கு பாதிப்பை உண்டாக்கும் என தேர்தலின் முடிவின் போது தெரியவரும்.