தமிழக சட்டசபை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது, அதிமுக அமைச்சர்கள் தவிர்த்து மற்ற வேட்பாளர்களுக்கு அதிமுக தலைமை தேர்தல் செலவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துள்ளதாகவும், அதே போன்று கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி வாரியாக ஒரு குறிப்பிட்ட தொகையை அதிமுக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது, இதே போன்று திமுக முன்னால் அமைச்சர்கள் தவிர்த்து மற்ற திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு, ஒவ்வொரு தொகுதிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தேர்தல் செலவுக்காக திமுக தலைமை கொடுத்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் தேதி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் அணைத்து கட்சிகளும் பணத்தை வாரி இறைத்து செலவு செய்து வருகின்றனர், ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு தலா ரூபாய் 100, அரசியல் காட்சிகள் நடத்தும் கூட்டத்துக்கு அழைத்து வரும் பெண்களுக்கு ரூபாய் 200, ஆண்களுக்கு 300 என்றும் ஒரு சில நட்சத்திர தொகுதிகளில் 500 வரையும் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்னும் தேர்தலுக்கு 3 தினங்களுக்கு முன்பு வாக்குக்கு பணம் கொடுக்க தயார் நிலையில் உள்ளது அரசியல் கட்சிகள்.
இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அனைவரும் TTV தினகரனிடம் இருந்து தேர்தல் செலவுக்கு பணம் வரும் என காத்திருந்து தற்போது நம்பிக்கை இழந்து பணம் வராது என்கிற முடிவுக்கு வந்துள்ளன, கடந்த நான்கு வருடமாக சிறையில் இருக்கும் சசிகலா விடுதலையானதும் அதிமுகவை கைப்பற்றி விடுவார் தினகரன் உடன் பயணிக்கும் நமக்கு எதிர்காலம் இருக்கும் என சொந்த பணத்தை செலவு செய்து வந்த அமமுகவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனை தொடர்ந்து வரும் சட்டசபை தேர்தலில் வேட்பளராக போட்டியிட்டால் ஒரு குறிப்பிட்ட தொகை TTV தினகரனிடம் இருந்து வரும், அதில் ஒரு தொகையை செலவு செய்து மீதம் உள்ள பணத்தை சுருட்டி கொள்ளலாம் என வேட்பாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்ததாக கூறபடுகிறது, இந்நிலையில் அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியான பின்பும் கூட TTV தினகரனிடம் இருந்து பணம் வரவில்லை இதனை தொடர்ந்து பணம் வர தாமதம் ஆகலாம் என நினைத்து வேட்பாளர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது தேர்தல் தேதி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அமமுக பலமாக உள்ள ஒரு சில தொகுதிகள் மற்றும் TTV தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதிகள் மற்றும் அதிமுக வாக்குகளை பிரித்து திமுக கூட்டணி வெற்றி பெற வைக்க கூடிய சுமார் 8 தொகுதிகள் என மொத்தம் 11 தொகுதிகளை மட்டும் தேர்தல் செலவுக்கு பணத்தை இறக்க TTV தினகரன் முடிவு செய்துள்ளதாக அந்தந்த வேட்பாளருக்கு தகவல் சென்றுள்ளது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த மற்ற தொகுதி வேட்பளர்கள் இதுக்கு மேல் TTV தினகரனை நம்பி மோசம் போக வேண்டாம் என்கிற முடிவில், இதுவரை தேர்தலுக்கு செலவு செய்தது போதும் இனிமேல் செலவு செய்வதை நிறுத்திவிட்டு அதிமுகவில் இருந்து விலைபேசினால் விலைபோகவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது, இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அமமுக வேட்பாளர்கள் விலை போக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.