திருச்சி திமுக உட்கட்சி மோதல் உச்சக்கட்டம்.! கே.என்.நேரு வீடியோ வெளியான பின்னனியில் அன்பில் மகேஷ் பொய்யமொழியா?

0
Follow on Google News

திமுகவின் உட்கட்சி மோதல் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து வருகிறது, உதயநிதி ஸ்டாலின் நெருக்கிய நண்பரும், திமுகவின் மூத்த அரசியல் தலைவர் அன்பில் தர்மலிங்கம் பேரன் அன்பில் மகேஷ் அரசியல் வருகைக்கு பின் திருச்சி மாவட்ட அரசியலில் நிர்வாகிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று வந்தார், இது அந்த மாவட்டத்தின் மூத்த திமுக அரசியல் தலைவர் கே.என்.நேருவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

தொடர்ந்து கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இடையே உச்சகட்ட உட்கட்சி மோதல் அதிகரிக்க, திருச்சி திமுக மாவட்ட செயலாளராக கே.என்.நேரு இருக்கும் வரை திருச்சி மாவட்ட அரசியலில் அன்பில் மகேஷ் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதால் திமுக தலைமை கே.என்.நேருவை திமுக முதன்மை செயலாளராக நியமித்து அவரை மாநில அரசியல் பக்கம் கவனத்தை திசை திருப்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழியை திருச்சி மாவட்ட அரசியலில் முழு சுதந்திரத்துடன் செயல்பட வழிவகுத்தது.

அனாலும் கே.என்.நேரு அவ்வப்போது மாநில அரசியலில் கவனம் செலுத்தி வந்தாலும் பெரும்பாலும் அவர் திருச்சியில் தங்கி இருப்பதால் மாவட்ட அரசியலில் அவரின் தலையீடு இருந்து வந்தது, மேலும் அன்பில் மகேஷ் வருகைக்கு பின் கே.என்.நேரு ஆதரவாளர்கள் திட்டமிட்டு ஓரம் கட்டப்படுவதாக குற்றசாட்டு கே.என்.நேரு கவனத்துக்கு வந்துள்ளது, இதனை தொடர்ந்து அவர் மாநில அரசியலை விட தனது திருச்சி மாவட்ட அரசியலில் அதிக கவனம் செலுத்த தொடங்கினர்.

இது அன்பில் மகேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இடையூறாக இருந்து வந்துள்ளது, இதனை தொடர்ந்து தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதி பங்கீட்டில் கே.என். நேருவின் தலையீடு அதிகமாகவே இருந்துள்ளது, சில இடங்களில் அன்பில் மகேஷ் அரசியல் எடுபடவில்லை என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர், இந்நிலையில் கே.என்.நேருவுக்கு எதிராக உள்ளடி அரசியலில் அம்பில் மகேஷ் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது.

காவலர்களுக்கு தபால் ஓட்டுக்கு பணம் கொடுத்து கே.என்.நேரு மாட்டிக்கொண்டது, மேலும் சமீபத்தில் நேரு ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி பேசியதை ரகசியமாக கைபேசியில் வீடியோ எடுத்து வெளியிட்டது,போன்ற செயல்கள் பின்னனியில் அன்பில் மகேஷ் இருக்கின்றாரா என சந்தேகம் கே.என்.நேருவுக்கு எழுத்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் திமுக நிர்வாகிகள் மட்டும் இருந்த போது கே.என்.நேரு பேசியது ஒரு திமுக நிர்வாகிகளால் மட்டுமே வீடியோ எடுத்து வெளியிட்டிருக்க முடியும் என கே.என்.நேருவிடம் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருவதாக கூறபடுகிறது.