திமுக தலைமையை நோக்கி படையெடுக்கும் அரசு உயர் அதிகாரிகள்! முக ஸ்டாலினை ரகசியமாக சந்தித்தது பின்னணி என்ன?

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வாக்கு பதிவு முடித்து சில நாட்களே ஆன நிலையில், இன்னும் தேர்தல் முடிவு வெளியாகாத நிலையில், அரசு உயர் அதிகாரிகள் ரகசியமாக திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து சில அரசியல் வல்லுநர்களை தொடர்பு கொண்டு பேசியதில் அரசு உயர் அதிகாரிகள் திமுக தலைவர் முக ஸ்டாலினை ரகசியமாக சந்தித்தது பற்றிய பின்னணி குறித்து சில தகவலை தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அடுத்தது யார் ஆட்சி அமைப்பது என பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில். திமுக – அதிமுக இரண்டு தலைமையும் தனக்கு நெருக்கமான உளவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேர்தல் நிலவரம் குறித்து கேட்டு அறிந்துள்ளனர், இரண்டு தரப்பினரிடம் தேர்தல் முடிவுகள் கணிக்க முடியவில்லை என்றும், அந்த அளவுக்கு கடும் இழுபறி நீடிப்பதாக தெரிவித்தவர்கள், அவரவர்களுக்கு சாதகமாகவே இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளதாக கூறபடுகிறது.

இதனை தொடர்ந்து அரசு உயர் அதிகாரிகள் சிலருக்கு அடுத்தது திமுக தான் ஆட்சி என தகவல் சென்றுள்ளது, இதனை தொடர்ந்து ரகசியமாக சென்று திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, அதே வேளையில் சில அரசு உயர் அதிகாரிகள் அடுத்தது அதிமுக ஆட்சியா.? இல்லை திமுக ஆட்சியா.? என்கிற பெரும் குழப்பத்தில் இருந்து வருவதால் அவர்கள் எந்த ஒரு அசைவும் இல்லாமல் அமைதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில உயர் அரசு அதிகாரிகள் முக ஸ்டாலினை சந்திப்பதற்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அடுத்ததும் உங்கள் ஆட்சி தான் என வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது, இந்நிலையில் அடுத்தது யார் ஆட்சி அமைப்பது என பெரும் குழப்பத்தில் மக்கள் மட்டுமின்றி அரசு உயர் அதிகாரிகளும் இருந்து வருவதாக செய்திகள் வெளிவரும் நிலையில் அதிமுக-திமுக இரண்டு தரப்புமே அடுத்தது எங்கள் ஆட்சி தான் என நம்பிக்கையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.