திருச்சியில் திமுக சார்பில் மார்ச் 14 நடைபெற இருந்த பொது கூட்டம் ஏப்.6 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்துள்ளதால் மார்ச் 7ல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதான் படி இன்று மாபெரும் கூட்டம், திருச்சியில் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாபெரும் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, கே என் நேரு, ஐ.பெரியசாமி, ஜெகதீசன், பொன்முடி, செல்வராஜ், ஆ.ராசா போன்ற மேலும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
300 ஏக்கரில், பிரம்மாண்ட 3மேடைகள் உடன் பகலில் ஒளி வீசும் பிரம்மாண்ட விளக்கங்களுடன் இலட்சக்கணக்கானோர் அமரும் இருக்கைகளுடன் திரும்பும் இடமெல்லாம் கொடி பறக்க என பிரமாண்டமாக அமைந்தது. இந்த மாபெரும் கூட்டத்திற்குகே கே.என்.நேரு தலைமையில் பகல் 11.30 மணியளவில் திருச்சி வந்த மு.க.ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலாச்சார வரவேற்புடன் மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு வந்த ஸ்டாலின் 100 அடி 100 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் திமுக கொடியை ஏற்றினார் ஸ்டாலின். நிகழ்ச்சியின் நடைபெறத் தொடங்கியது, கே.என்.நேரு நிகழ்ச்சி வரவேற்புக் தொடங்கி ஸ்டாலின் மற்றும் முன்னணித் தலைவர்கள் உரையாற்றினர். தொண்டர்களுக்கு திமுக பேஜ், தொப்பி, உணவு என அனைத்தும் சிறப்பாக ஏற்படு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொது கூட்டம் மூலம் வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுகவுக்கு சாதகமாக அமையுமா?