கோவில் திருத்தலங்கள், சுங்கை சாவடிகள் மற்றும் பொது இடங்களில் திருநங்கைகளில் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் பணம் கேட்கும் திருநங்கைகள் பணம் தரவில்லை என்றால் ரகளையில் ஈடுபடுவது, குறிப்பாக கடைகளில் உள்ள நபர்களை வரம்பு மீறி அவமான படுத்துவது, கடைகளில் இருக்கும் பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபடுவது போன்ற CCTV காட்சிகள் அடிக்கடி வெளியாகி வருவது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், கோவில் திருத்தலங்களில் திருநங்கைகளின் அட்டகாசம் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறது, குறிப்பாக பழனியில் பக்தர்களை குறிவைத்து திருநங்கைகள் குழுவாக சென்று சுற்றி வளைத்து பணம் கேட்பது, குறைந்த தொகையை கொடுத்தால் வாங்க மறுத்து அதிகப்படியான பணம் கொடுக்கும் வரை பக்தர்களை சூழ்ந்து கொண்டு கட்டாய பணம் வசூலித்த பின்பே அவர்களை விடுவிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்பாக தொடர்ந்து கவல்த்துறைக்கு புகார் சென்ற கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து, பழனியில் திருநங்கைகளுக்கான மறுவாழ்வு விழிப்புணர்வு உள்ளரங்க கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய எஸ்பி, “பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் திருநங்கைகள் கட்டாய பணம் வசூலிப்பது குற்றமாகும்.
பக்தர்கள் விரும்பி கொடுக்கும் பணத்தை பெறாமல் அவர்களை மிரட்டி அதிகபணம் பிடுங்குவதாக தொடர் புகார்கள் வருவது கவலையை ஏற்படுத்துகிறது.எனவே பழனிக்கு வரும் பக்தர்களை திருநங்கைகள் சூழ்ந்துகொண்டு மிரட்டும்வகையில் பணம் பறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் குற்றத்தில் ஈடுபடும் திருநங்கைகள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரித்தார்.
மேலும் திருநங்கைகள் தங்களுக்கு தெரிந்த தொழில்கள் மற்றும் வேலைகள் குறித்து தெரிவித்தால் அரசிடம் பரிந்துரை செய்து தொழிற்கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாகவும், எனவே பக்தர்களிடம் பணம் வசூல் செய்யும் செயலை திருநங்கைகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். பழனியில் வசிக்கும் திருநங்கைகள் தவிர சீசனுக்காக பழனி வந்து தங்கி பக்தர்களிடம் பணம் வசூல் செய்யும் திருநங்கைகள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பழனி டிஎஸ்பி சத்யராஜ், நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் அடிவாரம் காவல் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். காவல் துறையின் இந்த நடவடிக்கை குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.