பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகம் ஆனவர் மோகன் ஜி, இவரின் இரண்டாவது படமான திரௌபதி திரைப்படம் தமிழக்தில் மிக பெரிய தாக்கத்தை உருவாக்கியது, வடமாவட்டங்களில் நடக்கும் நாடக காதலை மய்யமாக வைத்து உருவாக்க பட்ட இந்த படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று வந்தாலும், குறிப்பிட்ட சிலர் இந்த திரைப்படத்தை கடுமையாக எதிர்த்து வந்தனர்.
இந்த திரைப்படம் வெளியில் வராமல் இருக்க டெல்லி வரை சென்ற தமிழக்தின் முக்கிய புள்ளி ஒருவர், திரௌபதி படத்திற்கு தடை பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார், ஆனால் அணைத்து சிக்கல்களையும் உடைத்து திரைக்கு வந்த திரௌபதி நாடக காதல் கும்பல்களின் முக திரையை கிழித்தது. பெண் குழந்தைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோர்களும் பார்க்கும் திரைப்படமாக அமைந்தது திரௌபதி.
இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தின் அடுத்த படைப்புக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது, இந்த படத்தின் First look போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய படத்தின் கதை குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளது, ஏற்கனவே நாடக காதல் கும்பல்களை கதற விட்ட இயக்குனர் மோகன் ஜி, இம்முறை மதமாற்றம் கும்பல்களை கதற விடுவது என முடிவெடுத்து, மதமாற்று சம்பவங்களை மய்யமாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இன்று வெளியிட்ட புதிய படத்திற்கான First Look போஸ்டரில் ஒரு குறிப்பிட்ட மத குறியீட்டு இருப்பதால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே நாடக காதல் கும்பலை கதறவிட்ட இயக்குனர் மோகன் ஜி, தற்போது மதமாற்று கும்பலை கதற விட தயாராகிவிட்டார் என first look போஸ்ட்டரை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.