திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியை அக்கூட்டணியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்த திமுகவின் தலைவர் முக ஸ்டாலினை மிரட்டும் நோக்கில் தான் தற்போது இந்து மனு தர்மம் குறித்து திருமாவளவன் பேசி பெரும் சர்ச்சையை உருவாக்கி, தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் வரை சென்று தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை திருமாவளவன் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வட மாவட்ட மக்களிடம் திருமாவளவனுக்கு கடும் எதிர்ப்பு அலை இருந்து வருவதால், மேலும் தமிழகத்தில் திருமாவளவனுக்கு எந்த ஒரு பகுதியிலும் அவருக்கென ஒட்டு வங்கி இல்லாத காரணத்தினால், விடுதலை சிறுத்தை கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்ற திமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவை திமுக கூட்டணிக்கு கொண்டுவரவேண்டும் என்றால் விடுதலை சிறுத்தை கட்சியை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டிய கட்டாயம் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீப காலமாக பாமக தலைவர், அதிமுகவுக்கு எதிராகவும், திமுக கட்சிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் திமுக – பாமக கூட்டணி அமைவதில் சுமுக முடிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற்றபடுவர் என செய்திகள் வெளியாகின, இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படுவதை உணர்ந்த திருமாவளவன் கையில் எடுத்த ஆயுதம் தான் இந்து மனு தர்மம்.
இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று மனு தர்மத்தில் கூறியதாக, ஒரு ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து, அதை பெறிதாக்கி, ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் இந்து எதிர்ப்பு சக்திகள் மற்றும் குறிப்பிட்ட சிறுபான்மை தலைவர்களை திருமாவளவன் ஒன்றிணைத்திருப்பது மூலம், அவர் தனது பலத்தை காட்டியது பாஜக மற்றும் இந்துஅமைப்புகளுக்கு கிடையாது என்றும், அவர் திமுக தலைவர் முக ஸ்டாலினை எச்சரிக்கவே இது போன்று செயல்படுவதாக கூறப்படுகிறது.
விடுதலை சிறுத்தை கட்சியை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றினால், இந்து எதிர்ப்பு வாக்குகள் மற்றும் சிறுபான்மை வாக்குகளை தன்னால் திமுக கூட்டணிக்கு செல்ல விடாமல் தடுக்க முடியும் என்பதை திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடும் நோக்கில் தான் அவர் இவ்வாறு செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமாவளவனின் இந்த செயல்களால் கடும் கோவத்தில் இருக்கும் முக ஸ்டாலின், தற்போது எந்த நகர்வுகளில் ஈடுபடாமல், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணியில் இருந்து திருமாவளவனை விரட்டியடிக்கம் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.