வரும் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, அதிமுக , திமுக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் அடுத்தது யார் ஆட்சி அமைப்பது என்பது தற்போது வரை நாளுக்கு நாள் ஒவ்வொரு விதமான கருத்து கணிப்புகள் வெளியாகி இரண்டு கட்சிகளுக்கு இடையில் இழுபறி நீடித்து வருகிறது, மேலும் அமமுக தலைமையில் ஒரு கூட்டணி, கமல்ஹாசன் தலைமையில் ஒரு கூட்டணி, சுயேட்சையாக சீமான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2006 சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்விக்கு தேமுதிக சுயேட்சையாக போட்டியிட்டு வாக்குகளை பிரித்தது முக்கிய காரணம், அடுத்து 2011 அதிமுக ஆட்சி அமைக்க தேமுதிக உடன் கூட்டணி, மீண்டும் 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணி தான் திமுக ஆட்சிக்கு வராமல் தடுத்து அதிமுக ஆட்சியில் அமைய காரணம் என ஆய்வுகள் தெரிவித்தன, அதே போன்று இந்த தேர்தலில் அமமுக மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தலைமையிலான கூட்டணி வாக்குகளை பிரித்து, அந்தந்த தொகுதியில் யார் வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றது.
அந்த வகையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அதிமுக, திமுக வாக்குகளை பிரித்தாலும் திமுக வாக்குகளை பெருமளவு பிரிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது, அதே போன்று அமமுக போட்டியிடும் தொகுதியில் அதிமுக வாக்குகளை பிரித்து தென்மாவட்டத்தில் ஒரு சில தொகுதிகளில் அதிமுகவின் தோல்வியையும், திமுகவின் வெற்றியையும் நிர்ணயம் செய்யும் இடத்தில் இருந்து வருகிறது.
இதற்கு முன்பு வரை அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக அந்த கூட்டணியில் இருந்து விலகி அமமுக உடன் கூட்டணி அமைத்திருப்பது அமமுகவுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது, அமமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றாலும் சில தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருந்து வருகிறது, அந்த வகையில் அமமுக பிரிக்கும் வாக்குகளால் அதிமுக தோல்வி அடையும் தொகுதிகள் எவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில் தென் மாவட்டத்தில் மதுரை மேலூர், உசிலம்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுக கைவசம் உள்ளது, அமமுக இந்த இரண்டு தொகுதிகளில் பெருமளவில் வாக்குகளை பிரிப்பதால் அதிமுக தோல்வியை தவிர்க்க முடியாது என ஆய்வுகள் தெரிவிக்கின்றது, அதே போன்று சிவகங்கை, கோவில்பட்டி ஆகிய தொகுதிகளிலும் கனிசமான வாக்குகளை அமமுக பிரிக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது, அதே போன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் அதிமுக வாக்குகளை அமமுக பிரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.