தடுப்பூசி சோப்பு தயாரிப்பது போன்றது கிடையாது.. ஆளூர் ஷாநவாஸ்க்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை IPS..

0
Follow on Google News

தனியார் தொலைக்காட்சியில் நடந்த திமுக VS பாஜக… மக்கள் நலனா.? அரசியலா.? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சில் விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் பேசுகையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆர்வம் காட்டிய பாஜக, தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் கொரோனா தடுப்புசி தயாரிக்க ஏன் ஆர்வம் காட்டவில்லை.ஆனால் திமுக அரசு தான் செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க முயற்சி செய்து வருகிறது.

சில தனியார் நிறுவனங்கள் கடந்த ஆறு மாதங்களாக தடுப்பூசி தயாரித்து வரும் நிலையில், செங்கல்பட்டு,குன்னுர் மற்றும் பொது துறை நிறுவனங்களை இன்று தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் போது திறக்க முயற்சி செய்தால், ஒரே நாளில் தடுப்புசி எப்படி தயாரிக்க முடியும், எதிர் தரப்பில் இருக்கும் ஆளும்கட்சி வலியுறுத்திய பின்பு தான் மத்திய அரசு முயற்சி செய்து வந்தால் இதற்கு திமுக அரசு எப்படி பொறுப்பேற்க முடியும் என கேள்வி எழுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்.

இதற்கு குறுக்கிட்டு பதிலளித்த பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை IPS பேசுகையில், நம்ம நண்பர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். தடுப்பூசி என்பது ரொம்ப டெக்னிகல் ஆன ஒரு சப்ஜெக்ட். நீங்கள் சொன்ன அதே செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் மத்திய அரசு தடுப்பூசி தயாரிக்கும் டெண்டரில் சில டெக்னிகல் காரணங்களுக்காக டெண்டரில் யாருமே கலந்து கொள்ளவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் நமது முதல்வர் கடிதம் எழுதி வருகிறார்.

தடுப்பூசி சோப்பு தயாரிப்பது போல் இருந்தால் யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம், ஏன் வந்து இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மட்டும் தயாரிக்கின்றது, ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் மற்றும் சில முக்கிய நிறுவனங்கள் தயாரிக்கிறார்கள் மற்ற நிறுவனங்கள் தயாரிக்க வில்லை என்றால். மற்ற நிறுவங்களுக்கு அதில் தொழில்நுட்ப அறிவு கிடையாது, இந்த தடுப்பூசி தயாரிப்பதற்காக சில வரைமுறைகள் இருக்கிறது அதை பின்பற்ற வேண்டும்,.

ஏதோ ஒரு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்திடம் இந்த டெக்னாலஜியை கொடுத்து தயாரிங்க என்று சொல்ல முடியாது.இந்த ஊசி போட்டு யாராவது ஒரு நபருக்கு ஏதேனும் பக்க விளைவு ஏற்பட்டால் ஒட்டு மொத்த இந்தியாவிலும் தடுப்பூசி போடுவது நிறுத்தப்படும் சூழல் ஏற்படும். ஆஸ்திரேலியா மற்றும் சில நாடுகளில் தடுப்பூசி பக்கவிளைவு ஏற்படுத்தியதை தொடர்ந்து அங்கே இரண்டு மாதம் தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைத்திருந்தார்கள். தயவுசெய்து நண்பர் ஆளூர் ஷாநவாஸ் மக்களை குழப்ப கூடாது தடுப்பூசி என்பது ஹைலி டெக்னிகல் சப்ஜெக்ட் என அண்ணாமலை தெரிவித்தார்.