திருப்பத்தூர் மாவட்டம் எல்லப்பள்ளி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த இந்து கோவில் ஓன்று உள்ளது, இந்த கோவிலில் உள்ள சிலை மற்றும் உண்டியல் சில மாதங்களுக்கு முன் சேத படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது, இந்நிலையில் தற்போது கோவில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என அணைத்து இடங்களிலும் சிலுவை படம் வரையப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இது குறித்து எல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவில் தெரிவித்ததாவது, வணக்கம். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, எல்லப்பள்ளி கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் பழமை வாய்ந்த கோயில் பல தலைமுறையாக சுமார் 250 குடும்பங்கள் இந்து முறைப்படி வழிப்பட்டுகொண்டிருக்கிறோம். இதற்க்கு முன் சிலை உடைத்து உண்டியலை உடைத்தும் உள்ளான் திரு.பாஸ்கர். இதைப்பற்றி முன்னரே போலீசில் 31.07.2020, 11.11.2020ம் அன்று புகார் அளித்தோம்.
14.01.2021 அன்று இரவு மின் விளக்குகளை அணைத்துவிட்டு அதே ஊரைச் சேர்ந்த திரு.மகேந்திரன், திருமதி. பேபி என்பவரின் மகன் பாஸ்கர் என்பவர் சிலுவையை வரைந்து இந்துக்கோயிலை கிருஸ்துவ ஆலயமாக மற்ற ஏற்பாடு செய்துள்ளான். இதை ஊர்ப்பொதுமக்கள் சேர்ந்து கேட்டதற்கு உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என் பின்னல் ஐந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் தூண்டுதல் பேரில் தான் வரைந்தேன்.
நீங்கள் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கேவலமான கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்துவிட்டான். சாலையின் இருபுறமும் சிலுவையை வரைந்துள்ளான். எனவே மதக்கலவரம் தூண்டுபவரையும், செய்தவரையும் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என புகார் மனுவில் தெரிவித்துள்ளார், இந்நிலையில் இந்த செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உடனே கைது செய்யவேண்டும் என எல்லப்பள்ளி கிராம மக்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.