மதுரையில் ஹாலிவுட் பட பாணியில் அந்தரத்தில் நடைபெற்ற திருமணம். சமூக வலைத்தளங்களில் திருமண வீடியோ வைரல்…

0
Follow on Google News

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சென்னையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் நடைபெற்ற மதுரை ஜோடியின் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா உச்சத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாமல் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதனால் ஞாயிற்றுக் கிழமையான (நேற்று) முழு ஊரடங்கை தளர்த்திக் கொண்டது தமிழக அரசு. இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்து பல்வேறு திருமணங்கள் நிகழ்ச்சிகள் நேற்று அவசரவசரமாக நடத்தப்பட்டது. மதுரையில் ஆங்காங்கே மண்டபங்களில் தமிழக அரசின் உத்தரவுப்படி குறைந்த அளவு உறவினர்களுடன் அனுமதி பெற்று திருமணங்கள் நிகழ்வுகள் நடைபெற்றது.

சிலர் பூட்டியிருக்கும் கோயில் முன் திருமணம் செய்து கொண்டனர். இந்த வேலையில் நேற்று மதுரையில் ஹாலிவுட் பட பாணியில் அந்தரத்தில் திருமண நிகழ்வு நடைபெற்றது. நேற்று சென்னையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மீனாட்சி ராகேஷ் – தீக்‌ஷனா ஜோடிகள் அவர்களின் உறவினர்களுடன் விமானத்தில் அந்தரத்தில் பயணித்து கொண்டு இருக்கும் போது தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். 7லட்சம் ரூபாய் செலவில் இந்த திருமணம் விமானத்தில் நடைபெற்றதாக கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.