வரலாற்று அறிவு இல்லாத முட்டாள்…நெறியாளர் செந்தில் மீது வழக்கு பதிவு செய்யும் பணி தொடங்கியது.!

0
Follow on Google News

நியூஸ் 18 தொலைக்காட்சியில் நெறியாளராக இருந்த செந்தில், சீன பொருட்களுக்கு இந்தியா தடை விதித்த போது சீப்பை ஒழித்து வைத்தால் திருமணம் நின்று விடுமா என டிவீட்டரில் பதிவு செய்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார், இதனால் அவர் மட்டுமின்றி அவரின் சக ஊழியர்களும் வேலையை இழக்க நேரிட்டது, இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைகாட்சியில் ஒரு விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய செந்தில்.

அந்த விவாதத்தில் பங்கு பெற்ற பாஜகவை சேர்ந்த அஸ்வத்தாமன், 1936 ஆம் ஆண்டு ராஜாஜி முதல்வராக இருந்த போது ஆலைய நுழைவு போராட்டம் நடைபெற்றது என்றும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வைத்தியநாத ஐயர் போன்றவர்கள் இந்த ஆலய நுழைவு போராட்டத்தை முன்னின்று நடத்தியதாக பேசிய போது, குறுக்கிட்ட நெறியாளர் செந்தில் இதை முற்றிலுமாக மறுத்தவர், ராஜாஜி அப்போது முதல்வராக இல்லை என கூறினார்.

இதனையெடுத்து எழுத்தாளர் மரித்தாஸ் இந்த விவாதம் குறித்து கூறுகையில், ‪தமிழ் நாடு ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட தகவல் இது என அதற்குரிய ஆதாரத்தை வெளியிட்டவர். ராஜாஜி 1939ல் இந்து ஆலயத்தில் பட்டியலின மக்கள் செல்வதற்கு இருந்த தடையை நீக்கச் சட்டம் இயற்றினார். ‬ஆனால் எந்த வரலாற்று அறிவும் இல்லாத முட்டாள் கூட்டம் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் வெறுப்பைப் பரப்பத் துடிக்கிறது.‬ குறிப்பிட்ட செய்தி நிறுவனம் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் வழக்குப் பதிவு செய்யும் பணியை தொடங்குவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக முக்கிய தலைவர் H.ராஜா கூறுகையில், காங்கிரஸ் கட்சி ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த பின் வெள்ளை ஆட்சியின் கீழ் எந்த தேர்தலிலும் பங்கு பெறுவதில்லை என்று முடிவு செய்தது. அதன் காரணமாகவே சென்னை ராஜதானியில் ஆங்கிலேயக் கூலி நீதிக்கட்சி தேர்தலில் பங்கேற்று 1919-36 17 ஆண்டுகள் சென்னை ராஜதானியை ஆண்டது. ஆனால் Government of India Act 1936 ன்படி மாகாண அரசுகளுக்கு அதிக அதிகாரம் பகிர்ந்தளிக்கப் பட்டதால் காங்கிரஸ் தேர்தலில் பங்கேற்க முடிவு செய்தது. அதன் படி நடந்த தேர்தலில் பெங்கால் மாகாணம் தவிர அணைத்து மாகாணங்களிலும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

சென்னை ராஜதானியில் ராஜாஜி அவர்கள் 1937ல் மாகாண பிரிமியராக பதவியேற்றார். இவைகள் குறித்து எவ்வித விஷய ஞானமும் இல்லாத செந்திலின் அறியாமையை தோலுரித்துக் காட்டிய அஸ்வத்தாமன் பாராட்டுக்குரியவர். மேலும் ஆலய நுழைவு குறித்தோ மாகாண அரசுகளின் அதிகாரங்கள் குறித்தோ எவ்வித அறிவுமின்றி ஈ.வெ.ரா அடிப்பொடிகள் பேசியது இவர்கள் அனைவரும் முட்டாள்கள் என மீண்டும் நிரூபணம் என கடுமையாக H.ராஜா சாடியுள்ளார்.