மதுரையில் கருணாநிதி சிலை அகற்றப்பட்டு வ.உ.சி பூங்கா அமைக்கப்படும்.! பாஜக மாநில பொதுச் செயலாளர் உறுதி.!

0
Follow on Google News

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு மதுரை சிம்மக்கல் பகுதியில் நடந்தது, அங்கே சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் பிள்ளை சிலை அருகே கருணாநிதி சிலை திறக்க பல தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, குறிப்பாக பிள்ளைமார், முதலியார் சமுதாய மக்கள் வ.உ.சி சிலை பக்கத்தில் கருணாநிதி சிலை திறப்பது வ.உ.சி புகழுக்கு கலங்கம் ஏற்படுத்துவது போன்று உள்ளது என்றும், ஆகையால் கருணாநிதி சிலை திறக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது, மேலும் கருணாநிதி சிலை திறக்க கையகப்படுத்தப்பட்ட இடத்தில் வ.உ.சி. நினைவு பூங்கா அமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில், பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் மதுரை ஆட்சியரை சந்தித்து, கருணாநிதி சிலை திறக்க அனுமதிக்க கூடாது என சிலை திறப்புக்கு முந்தைய நாள் மனு கொடுத்தார், மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் தங்களால் முடிந்த நடவடிக்கையை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார், இதனை தொடர்ந்து கருணாநிதி சிலை திறக்கப்படுமா என பரபரப்பு நிலவிய நிலையில் 17-2-2021 அன்று கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு மதுரை வந்தார் முக ஸ்டாலின்.

இந்நிலையில் கருணாநிதி சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ள சிம்மக்கல் பகுதியில் பாஜகவினர் போராட்டத்தில் குதித்தனர், அங்கே கருப்பு கொடி காட்டியும் சாலை மறியலில் ஈடுபட்டும் 500க்கு மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது, போலீசார் பெருமளவில் அங்கே குவிக்கப்பட்டனர், ஒரு கட்டத்தில் சிலை அமைக்கப்ட்டுள்ள இடத்தை நோக்கி போராட்டக்காரர்கள் சென்றதும் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட பாஜகவினரை சந்திக்க சென்ற அக்கட்சியின் மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் கூறுகையில், மதுரை மாநகருக்கு உட்பட ஒரு சட்டமன்ற தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் கூட, தற்போது சிம்மக்கல் பகுதியில் உள்ள கருணாநிதி சிலை அகற்றப்பட்டு வேறு ஒரு இடத்துக்கு மாற்றி அமைக்கப்படும் என்றும்,தற்போது கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ள இடம் வ.உ.சி நினைவு பூங்கா அமைக்கப்படும் என்றும், மேலும் தற்போது உள்ள வ.உ.சி சிலை வெண்கல சிலையாக மாற்றப்படும் என உறுதியளித்தார்.

மேலும் அவர் கூறுகையில் கருணாநிதி சிலை வ.உ.சி. சிலை அருகில் திறப்பதற்கு தான் நாங்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றோம், ஒரு சுதந்திர போராட்ட தியாகி, மாபெரும் தலைவர் வ.உ.சி சிலை அருகில் கருணாநிதி சிலை இருந்தால், வ.உ.சி புகழுக்கு கலங்கம் ஏற்படுத்துவது போன்று இருக்கும் ஆகையால் மற்றொரு பகுதியில் கருணாநிதி சிலை மாற்றி அமைக்கவேண்டும் என பேராசிரியர் தெரிவித்தார்.