திருநெல்வேலியின் சிறப்பும் அறியப்படாத வரலாறும்…

0
Follow on Google News

மதுரைக்கு மல்லி ஃபேமஸ் மாதிரி , திருநெல்வேலியில் அல்வா தான் ஃபேமஸ். திருநெல்வேலி இருட்டு கடை அல்வா என்றாலே அதற்கு என தனி சிறப்பு உண்டு. அதுபோல இங்கு ஓடும் ஆறுகள் தமிழகத்தில் சிறந்த ஆறுகளாக உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கே பார்க்கலாம் வாங்க. திருநெல்வேலி வளமாக செழிப்பாக உள்ளது என்றால் அது இங்கு ஓடும் தாமிரபரணி ஆறு தான் காரணம். இந்த ஆற்றை தண்பொருநை என்று முன்னோர்களால் போற்றப்படுகிறது.

இங்கு பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, கரையாது என்று பல கிளைகள் ஆறுகளாக பிரிந்து மிகப்பெரிய மாவட்டமாக தெரிகிறது. திருநெல்வேலி மாவட்ட பொருளாதார வளர்ச்சியில் முதன்மை பங்கு பெற்று வருகிறது . உழவுத் தொழிலுக்கு முதன்மை பெற்று மாவட்டமாக உள்ளது திருநெல்வேலி. தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெற்று வருகின்றன .

இங்கு குலத்து பாசனமும் கிணற்றுப்பாசனம் கூட பயன்பாட்டில் உள்ளன. இங்கு சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி ,பருத்தி, பயறு வகைகள் போன்றவற்றை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா ,கேரளா, அந்திரபிரதேஷ் போன்றவற்றை மாநிலங்களிலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டம் தான் முதலிடம். கடலோர மீன்பிடித் தொழிலும் இந்த மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்கு பல வகையான தரமுள்ள மீன்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பாவங்கள் போக்கும் பாபநாசத்தில், குளித்துவிட்டு பாவத்தைப் போக்க அகத்தியர் ஃபால்ஸ் அமைந்துள்ளது. பாபநாசம் மலையில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது காவக்கார சொரிமுத்து அய்யனார் கோயில். தாமிரபரணி கடலோடு கலக்குமிடத்தில் கோட்டை என்னும் துறைமுகம் உள்ளது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழ் இலக்கியங்களில் இதனை போற்றப்பட்டுள்ளது. கோர்க்கையில் விளைந்த பாண்டிய நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது. சங்க காலங்களில் இங்கு கிடைக்கும் கொற்கை முகங்கள் முத்துக்களை வாங்க கிரேக்கம், உரோமாபுரி ஆகிய நாடுகளை சார்ந்தவர்கள் ஓடோடி வருபவர்கள்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நெல்லை மாநகரில் அமைந்துள்ள அழகை செல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இந்த நகரின் நடுவே அமைந்துள்ளது நெல்லையப்பர் திருக்கோவில். கோவிலுக்குள் பிரம்மிக்க வைக்கும் கட்டிடக் கலைகளும் மண்டபமும் சிவனையும் விஷ்னுவையும் ஒரு இடத்தில் தரிசிக்க கூடிய பாக்கியத்தை கொடுத்துள்ளது நெல்லையப்பர் கோயில்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி மாசி வீதிகள் போல் இந்த நெல்லையப்பர் கோவிலை சுற்றி நான்கு பக்கங்களிலும் மாட வீதிகள் இடம்பெற்றுள்ளது, அவற்றை சுற்றி தேரோடும் வீதிகள். இங்கு திங்கள் தோறும் திருவிழா நடைபெறும் என்பதனை திருஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார்.

நெல்லை மாநகரில் உள்ள தெருக்களின் பெயர்கள் பழமை நினைவு கூறுகிறது. அப்படிதான் அங்கு ஒரு தெருவுக்கு காவற்புரைத் தெரு என்று அழைக்கப்படுகிறது. காவற்புரை என்றால் சிறைச்சாலை அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் மட்டும் அங்கே சிறை வைக்கப்படுவதால் இப்பெயர் பெற்றது. மேலவீதி தெரு அருகில் கூறை கடையும் உள்ளது. கூலம் என்பது தானியத்தை பொறுப்பேற்கும் வகையில் கூறப்படும் என்பதே மருவி கூறைகடை என்றும் அழைக்கப்பட்டது..

அக்கசாலை என்பது அணிகலனும், பொற்காசுகளும் உருவாக்கும் பயன்படும் விதமாக இங்கு காணப்படுகிறது. முன்பு காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்களே வாழ்ந்து வந்த இடமாகும்.அக்கா சாலை தெரு என்னும் பெயரில் இடம் பெற்றும் சிறந்து வளம் பெற்று வந்தன. தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் திருநெல்வேலி கிழக்கு கரையிலும் பாளையங்கோட்டை அமைந்துள்ளன.

இவ்விரண்டு நகரங்களுக்கு இடையே இரட்டை நகரம் எனவும் அழைக்கப்பட்டது. பாளையங்கோட்டையில் அதிகம் பெருமளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் இந்நகரம் தென்னிந்தியாவில் ஆக்ஸ்போர்ட் எனப்படும். நெல்லை நகரில் மேற்கை பேட்டை என்னும் ஊர் உள்ளது வணிகம் நடைபெறும் சிறந்த பகுதியாக பேட்டை என அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மரபினை பற்றியும் பயணிக்கும் பயிற்சி நிலையங்கள் இருக்கின்றன. இவ்வகையான சிறப்புகள் அமைந்திருக்கின்றன.

பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம் என்றும் மக்களால் போற்றப்படுகிறது. மங்கையர்க்கரசி மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை நகரம் என்று முன்னோர்களால் போற்றப்படுகிறது. பண்டைய காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்ற பெயர் பெற்று அழைக்கப்பட்டது. மூங்கில் காடு இதன் அர்த்தமாகும். மூங்கில் எங்கு அதிகமாக விளையும்.. அதனால் இங்கு பெருமளவில் சிறப்பு பெற்று விளங்கும் மூங்கில் தன்மையை கொண்டது இத்தனை சிறப்பு கொண்ட நெய்வேலியில் திருநெல்வேலி என்று நாம் அழைக்கிறோம்.