வரலாற்றுச் சிறப்புமிக்கச் சாதனையாக, நாட்டில் செலுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 100 கோடி இலக்கைக் கடந்து விட்டது. இந்த பிரம்மாண்டச் சாதனையை அடைய பணியாற்றிய நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் “இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது, இந்தியாவின் அறிவியல், தொழில் மற்றும் 130 கோடி இந்திய மக்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை நாம் கண்கூடாக காண்கிறோம் என தெரிவித்த பிரதமர்.
மேலும் 100 கோடி தடுப்பூசி சாதனையைப் படைத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி என பிரதமர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு பிரதமர் தெரிவித்த வாழ்த்து செய்தி அடங்கிய வாழ்த்து அட்டையை தமிழக முழுவதும் உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு நேரில் சென்று கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் பாஜக தலைவர்கள்.
தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன், நேற்று மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை சந்தித்து பிரதமரின் வாழ்த்து செய்தி அடங்கிய வாழ்த்து அட்டையை அளித்து நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார், அப்போது செவிலியர் காலில் விழுந்து நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்த பேராசிரியர் பின் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் பேசியதாவது.
எட்டு மத காலத்துக்குள் இலவசமாக 100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது, இதை நிகழ்தியவர் பிரதமர், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார், அந்த கடிதத்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் கொடுத்து நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகிறோம், இதே போன்று கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சென்று நன்றியும் வாழ்த்தும் தெரிவிக்க இருப்பதாக பேராசிரியர் தெரிவித்தார்.