தென் தமிழகத்தில் பாஜக வேட்பாளர் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.2 பிரச்சாரம் தேதி முடிவு செய்யப்பட்டது. இந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பிரதமர் மோடி மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள இடத்தை தேர்வு செய்தனர். அந்த இடம் பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கு வந்தது. பிரம்மாண்டமாக பிரச்சாரம் நடைபெற இருக்கும் இடம் அமைக்கப்பட்டது.
ஏப். 2ல் நடக்க இருந்த பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி ஏப்ரல். 1ல் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் அன்று மாலை மதுரை வரலாற்று சிறப்புமிக்க மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் தரிசிக்க மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு பிரதமர் வருகை ஒட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
மாசி வீதிகளில் வலம் வந்து மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் பெற்றார். பிரதமரை காண வழி எங்கும் ஏராளமான கூட்டம். வரலாற்றிலே மீனாட்சி அம்மன் கோயிலை தரிசனம் பெற்ற ஒரே பிரதமர் மோடி தான். பிறகு அன்று இரவு மதுரை தாஜ் ஹோட்டலில் தங்கினார். அடுத்த நாள் நடைபெற இருக்கும் தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தில் கலந்து கொள்ள காலை 11 மணிக்கு மேல் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு காரில் செல்ல இருந்தார்.
மதுரை பிரதமர் செல்லும் வழிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது மேலும் போக்குவரத்து சில இடங்களில் துண்டிக்கப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள இடத்திற்கு காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடல் போல் திரண்ட மக்கள். அந்த பிரம்மாண்ட பிரச்சார மேடையில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருமாறன், ஜான் பாண்டியன், தமிழக தேசிய தேர்தல் பொறுப்பாளர் சி.டி. ரவி வி.கே. சிங், பாஜக தமிழக பொதுச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், மற்றும் கவேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி பிரச்சார கூட்டத்திற்கு எஸ் பி ஜே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து காரில் வந்தடைந்தார். பிரதமர் மோடி தமிழில் வெற்றி வேல் வீர வேல் உரையை ஆரம்பித்தார். மதுரையை தூங்க நகரம் என்று அழைத்து மதுரை கலாச்சாரத்தை பெருமைப்படுத்தினார். பாஜக சாதனைகளைப் பட்டியலிட்டார். பிறகு திமுகவை கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருக்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி சிந்திக்காத கட்சிகள் இன்று எய்ம்ஸ் பற்றி பேச கூடாது. விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து தரப்படும் என்று உறுதி கூறினார்.
மேலும் திமுக பெண்களை அவமதித்து வரும் திமுகவை கடுமையாக கண்டித்தார். கண்ணாகி வீர நாச்சியாரை புகழ்ந்தார். மேலும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு அளித்து வெற்றி பெற செய்யுமாறு பிரதமர் விடைபெற்று ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி கிளம்பினார். இந்த பிரம்மாண்ட மக்கள் கூட்டத்தை கண்டு எதிர்கட்சி அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.