நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் வர இருக்கும் நிலையில், தேர்தலில் யார் வெற்றி பெற போவது என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்கிற அலை இருந்தது, இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என்கிற ஒரு பிம்பம் தமிழகத்தில் கட்டியமைக்கப்பட்டிருந்தது, மேலும் தேர்தலுக்கு ஒரு வருடங்களுக்கு முன்பே இறுதி செய்யப்பட்ட திமுக கூட்டணி பலம், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக தேர்தல் களம் மெல்ல மாறியது, மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு படி படியாக குறைந்து மக்கள் மத்தியில் சில மாற்றங்கள் உருவாகியது, இருந்தாலும் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு வருடங்களுக்கு முன்பு வரை எப்போது தேர்தல் நடந்தாலும் திமுக மெஜாரிட்டியில் ஆட்சி அமைக்கும் என்கிற சூழல் இருந்தது, ஆனால் கொரோனா நிவாரண நிதி ரூபாய் 1000, பொங்கல் பரிசு ரூபாய் 2500, விவசாய கடன் ரத்து, நகை கடன் ரத்து என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு திமுக-அதிமுக இடையே தேர்தலில் கடும் போட்டியை உருவாக்கியது.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின்பு அதிமுகவுக்கு ஆதரவாக பல சாதகமான சூழல் ஏற்பட்ட போதும் கூட முதல்வர் பழனிசாமி செய்த தவறு தான் இன்றைய தேர்தல் இழுபறிக்கு காரணம் என தெரிவித்த பிரபல அரசியல் பார்வையாளர், எடப்பாடி பழனிச்சாமி செய்த தவறுகளை பட்டியலிட்டுள்ளார். அதில் தேமுதிகவை உதாசீனபடுத்தி கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி,
சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் முயற்சி சுமூக முடிவு எட்டப்பட்ட போது, எடப்பாடி பிடிவாதம் சசிகலா-அதிமுக இணைப்பு தடைபட்டது, இதனை தொடர்ந்து TTV தினகரன் தரப்பில் இருந்து 13 தொகுதிகள் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு வழங்கினால் தான் இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை, எனது கட்சி நிர்வாகிகள் அதிமுகவுடன் இணைந்து வேலை செய்வார்கள் என்ற கோரிக்கையையும் நிராகரித்தவர் எடப்பாடி, இதனால் அதிமுக வாக்குகள் பெருமளவு பிரிக்கப்படுகிறது.
இது போன்ற தவறுகள் தான் இன்று அதிமுக- திமுக இடையே தேர்தல் முடிவுகள் கடும் இழுபறியில் இருப்பதாக தெரிவித்த அரசியல் பார்வையாளர், இந்த தவறுகளை முதல்வர் எடப்பாடி சரி செய்திருந்தால், இந்த சட்டசபை தேர்தலை எளிதாக சாதித்து இருக்கலாம் என மேலும் எடப்பாடி தவறுகளை சுட்டி காட்டி தேர்தல் களத்தில் இழுபறிக்கு எடப்பாடி தான் முக்கிய காரணம் என குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.