மாரிதாஸ் கைது செய்யப்பட வேண்டும் என திமுகவை சேர்ந்த மனுஷ்ய புத்திரன் போன்றோர் அடம் பிடித்து வருகின்றனர், சமூக வலைதளத்தில் எதிர் கருத்து தெரிவித்த பிரபல சமூக வலைதள பிரபலம் கிஷோர் கே சாமி குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க பட்டுள்ளார், இதற்கு குண்டாஸ் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுகவை சேர்ந்த மனுஷ்ய புத்திரன் மரித்தாஸ் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது.
ஊடகவியலாளர்கள்மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திமுக அரசு ரத்து செய்திருக்கிறது. அதேசமயம் கிஷோர் கே.சாமி என்ற சமூக விரோதி கைது செய்யப்படுகிறார். மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது அதிமுக ஆட்சியில் நடந்ததற்கு நேர் எதிரானது. அதிமுக ஆட்சியில் அரசின் செயல்பாடுகளை விமர்சித்த பத்திரிகையாளர்கள் மீது வழக்கு, கோவன் போன்ற ஒரு பாடகருக்கு சிறை என்ற நிலை ஒரு புறம் என்றால் கிஷோர் கே சாமி, மாரிதாஸ் போன்றவர்கள் மேற்கொண்ட அவதூறுகள், தனிநபர் தாக்குதல்கள் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களில் எந்த நடவடிக்கையும் அதிமுக அரசு எடுக்கவில்லை.
உண்மையான ஊடகவியலாளர்கள் பொய் வழக்குகளால் அச்சுறுத்தப்பட்டார்கள். மாறாக ஊடகப் பொறுக்கிகள் பாதுகாக்கப்பட்டார்கள். அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள்மீது இந்தப் பொறுக்கிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் சாதாரணமானல்ல, ஒயிட் போர்டு மாரிதாஸ் திமுக, இடது சாரி, தலித் தலைவர்கள்மேல் பரப்பிய ஆதாரமற்ற பொய் செய்திகள், நியூஸ் 18 லெட்டர் பேடையே போர்ஜரி செய்தது, மத மோதல்களைத்தூண்டியது என எவ்வளவு குற்றங்கள்…தங்களது அடியாட்களாக இவர்கள் செயல்பட்டார்கள் என்ற ஒரே காரணத்தினால் அதிமுக- பா.ஜ.கவால் இவர் காப்பாற்றப்பட்டார்.
கருப்பர் கூட்டம் விவகாரத்தில் தாடிவைத்த ஒருவரை நியூஸ் 18 ல் பணிபுரிந்த ஒரு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த செய்தியாளர் என ஆள்மாறாட்ட அடையாளம் காட்டி அவரது வேலைக்கே உலை வைத்ததுடன் குணசேகரன், செந்தில்வேல் போன்ற முண்ணனி ஊடகவியலாளர்கள் வெளியேறக்கூடிய சூழலையும் இந்த சமூக விரோதக் கும்பல் செய்தது. மாரிதாஸ்போன்ற கிருமிகள் பரப்பும் பொய்ச்செய்திகள் சமூக வலைத்தளங்கள் வழியாக கடைகோடி மனிதனுக்கும் கொண்டுபோய் சேர்க்கப்படுகின்றன.
இந்தப்பொய்களின் வழியாக நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த விஷக்கிருமிகள் சமூகத்தில் பரவாமல் சட்டப்படி தடுத்துவைப்பது மிகவும் முக்கியம். கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டதைவிட பல மடங்கு நியாயம் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டும் என்பதில் இருக்கிறது என மனுஷ்ய புத்திரன் தெரிவித்துள்ளார்.