வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக கூட்டணிக்கு மூன்று தொகுதிகள் வரை மதுரை மாவட்டத்தில் ஒதுக்க பேச்சு அடிபட்டது, இறுதியில் மதுரை கிழக்கு தொகுதி மற்றும் வடக்கு தொகுதி என இரண்டு தொகுதிகளை கேட்டு பெற பாஜக தலைமை முடிவில் இருந்தது, இதில் கடந்த மூன்று வருடங்களாக மதுரை கிழக்கு தொகுதியை இலக்காக வைத்து, கிழக்கே எங்கள் இலக்கு என மதுரை புறநகர் மாவட்ட பாஜகவினர் வேலை செய்து வந்தனர்.
மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 25 டன் வரையிலான அரிசி மற்றும் மளிகை பொருள்கள், முக கவசம் என தொடர்ந்து நிவாரண பணிகளை மேற்கொண்டனர், மதுரை கிழக்கு தொகுதியில் பாஜகவினர் நிவாரண பணியை மேற்கொண்ட பிறகு தான் மற்ற கட்சியினர் அங்கே நிவாரண பணியில் ஈடுபட தொடங்கினர்.
இந்நிலையில் திமுக மதுரை கிழக்கு தொகுதி சிட்டிங் எம்,எல்,ஏ மூர்த்தியை எதிர்த்தும் கடுமையாக அரசியல் செய்து வந்த பாஜகவினர் மதுரையில் இரண்டு தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் அதில் மதுரை கிழக்கு தொகுதி உறுதியாக கிடைக்கும் என தொகுதி பட்டியல் வெளியாவதற்கு முன்பே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர், ஆனால் பாஜகவுக்கு ஒதுக்கிய 20 தொகுதிகளில் மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டது அதில் மதுரை வடக்கு தொகுதி மட்டுமே இடப்பெற்றிருந்தது.
இதனால் சற்றும் வருத்தம் அடையாமல் மதுரை நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரை வடக்கு தொகுதியில், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையிலான பாஜக நிர்வாகிகள்,தொகுதி பட்டியல் வெளியான அன்றே மதுரை வடக்கு தொகுதி அலுவலகத்து வந்தவர்கள் மதுரை வடக்கே எங்கள் இலக்கு என மதுரை நகர் மாவட்டத்துடன் இணைந்து வேட்பளராக பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசனை முன்னிறுத்தி பிரச்சாரத்தை தொடங்கினர்.
இதில் மதுரை நகர் மாவட்ட தலைவர் கே.கே.ஸ்ரீநிவாசன் பல்வேறு வியூகங்களை வகுத்து கொடுத்து நகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கு வேலைகளை பகிர்ந்து கொடுத்தார், ஆனால் இறுதியில் மதுரை வடக்கு தொகுதியில் வேட்பளராக திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த திமுக எம்.எல்.ஏ சரவணன் அறிவிக்கப்பட்டது, மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும்,
அடுத்த சில மணி நேரங்களில், வேட்பாளர் என அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கபட்ட பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் உட்பட மதுரை நகர் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் தாமரையே எங்கள் இலக்கு மதுரை வடக்கு தொகுதியில் சரவணனை வெற்றி பெற வைப்போம் என சபதம் ஏற்று வேலை செய்துவருவது மதுரை மாவட்ட பாஜகவினர் மத்தியில் ஒற்றுமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது, இதற்கு முக்கிய காரணம் அந்த இரண்டு மாவட்டத்தையும் வழிநடத்த கூடிய மாவட்ட தலைவர்கள் தான் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.