மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் காலம் அவர்களின் 104 வயது அண்ணன் காலமானார்…!

0
Follow on Google News

முன்னாள் ஜனாதிபதியின் அண்ணன் காலமானார். மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்களின் அண்ணன் முத்து மீரான் மரைக்காயர் நேற்று இரவு உடல் நலக் குறைவால் காலமானார். கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல… உன்னை தூங்கவிடாமல் காண்பதே இலட்சியக் கனவு என்று இளைஞர்களின் மனதை கவர்ந்த கனவு நாயகன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த மண்ணில்தான் அவரது அண்ணனும் வாழ்ந்து வந்தார்.

ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு 7 குழந்தைகள் அதில் தற்போது இவர்களில் ஜெய்னுலாபுதீன் என்ற மகனும், தெஹ்ராஜ் பேகம் மற்றும் நசீமா மரைக்காயர் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

104 வயது உடைய இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார் இவரின் உயிர் நேற்று பிரிந்தது. இவரது உடல் இஸ்லாமிய மதப்படி சடங்குகள் செய்யப்பட்டு அவரது வீட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.