கரூரில் அமைக்கப்பட்டு வரும் காந்தி சிலை தரமற்றதாக இருப்பதாக, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி போராட்டத்தில் ஈடுப்பட்டார். காந்தி சிலை அமைக்கும் கட்டுமான பணிக்கு இடையூறாக ஜோதிமணி போராட்டம் நடத்துவதால் போலீசார் ஜோதிமணி உட்பட்ட அனைவரையும் கலைந்து போக வலியுறுத்தினார், ஆனால் ஜோதிமணி தொடர்ந்து போராட்டம் நடத்தியதை தொடர்ந்து,போலீசார் ஜோதிமணியை குண்டுக்கட்டாக கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
இந்த சம்பவத்துக்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது, திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்த சம்பவம் குறித்து கூறுகையில்.கடைசி நேரக் கொள்ளைக்காக கரூரில் 70 ஆண்டுகால மகாத்மா காந்தி சிலையை அகற்றி, புதுச் சிலை என்னும் தரமற்ற கட்டுமானத்தைத் தட்டிக் கேட்ட மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை காவல்துறை பெண் என்றும் பாராது தவறான முறையில் கைது செய்திருக்கிறது. மக்கள் விரைவில் தீர்ப்பளிப்பர்! என தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,கரூரின் அடையாளமாக இருந்த ரவுண்டானா காந்தியடிகள் சிலையை அறிவிப்பில்லாமல் அப்புறப்படுத்திய எடுபுடிஅரசு, கொள்ளையடிக்கும் நோக்கில் சிலைக்காக தரமற்ற கட்டுமானத்தை மேற்கொண்டதை கண்டித்து அறவழியில் போராடிய சகோதரி ஜோதிமணி MP அவர்கள் காட்டுமிராண்டித்தனமாக கைதுசெய்யப்பட்டதை கண்டிக்கிறேன்.
மேலும்,காந்தியடிகளுக்கு சிலை வைப்பதில் கூட ஊழல் செய்யும் அடிமைகள், அதை அகிம்சை வழியில் தட்டிக்கேட்பவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது மிகப்பெரிய அவமானம். இதற்கு பழனிச்சாமி அரசு வெட்கி தலைகுனிய வேண்டும் என தெரிவித்துள்ளார், அதே போன்று திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி இது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் அதில்,
கரூரில் 70 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட காந்தி சிலை அகற்றியதை எதிர்த்து போராடிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களையும் கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் கரூர் வருவதை முன்னிட்டு ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் இந்த அதிமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.