அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக உலகம் முழுவதும் நிதி வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில், மதுரை மாநகராட்சியில் நூறு வார்டுகளிலும் ராமன், ரத யாத்திரை நடத்தி நிதி வசூல் செய்ய ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த ரத யாத்திரைக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டும் அனுமதி மறுத்து திலகர் திடல் காவல் உதவி ஆணையர் உத்தரவிட்டார்
இந்நிலையில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் ரத யாத்திரைக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதி, மதுரையில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மதுரை மாவட்ட ரத யாத்திரைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து பிப்ரவரி 20 முதல் மதுரையில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை மதுரையில் ராமர் ரதம் சென்று மக்களிடம் நிதி பெற ஏற்பாடு செய்யப்பட்டது.
பிப்ரவரி 20ம் தேதி காலை மதுரையில் தொடங்கிய இந்த ரதயாத்திரை, மதுரையில் பல்வேறு இடங்களுக்கு சென்று நிதி வசூல் செய்தது, இந்நிலையில் பிப்ரவரி 20ம் தேதி மாலை ஆரப்பாளையம் அருகில் ரதம் சென்ற போது காவல் துறையினரால் ரதம் தடுத்து நிறுத்தப்பட்டு ரதயாத்திரை வாகனம் சிறை பிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து ரத யாத்திரை நடத்த கூடாது என காவல் துறையினர் தொடர்ந்து ரத யாத்திரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது, அந்த மனுவில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ராமர் கோவில் கட்டும் பணிக்காக உலகம் முழுவதும் வாழும் இந்துக்களிடம் எங்கள் அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் நூறு வார்டுகளிலும் ராமர் கோவிலுக்கு நிதி வசூலிக்க ரத யாத்திரை நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.
காவல் துறை அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தோம். தனி நீதிபதி விசாரித்து நிபந்தனைகளுடன் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார். அதன் பிறகும் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று மதுரை உயர்நிதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றது, அப்போது மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், நீதிமன்றம் உடனடியாக ரத்தயாத்திரைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டுந்த நிலையில், தற்போது வரை அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. ரத யாத்திரை வாகனத்தையும் காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்றார். இதையடுத்து, ரதயாத்திரை வாகனத்தை உடனடியாக விடுவிக்கவும், மதுரை மாநகர காவல் ஆணையர் மார்ச் 1-ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.