பிரதமரை கொடூரமாக சித்தரித்த பிரபல பத்திரிக்கை.! 124(A), 153, 153(A), 153(B), 499, 504, 505 (1) , 505(2), 188 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை.!

0
Follow on Google News

டெல்லியில் நடந்த விவசாய போராட்டம் கலவரமாக வெடித்தது, இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கலவரக்காரர்கள், போலீசார் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு, ஆயுதங்களுடன் டெல்லி செங்கோட்டை உள்ளே நுழைந்து காலிஸ்தான் கொடியை ஏற்றி மிக பெரிய அராஜகத்தில் ஈடுபட்டனர், இந்த சம்பவம் குறித்து பிரபல தமிழ் பத்திரிகை ஓன்று, பிரதமர் மோடியை கீழ்த்தரமாக சித்தரித்து, கலவரத்தில் ஈடுபட்ட கலவரகர்களுக்கு ஆதரவாக ஒரு கேலி சித்திரம் வெளியிட்டது, இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் தமிழக பாஜக சட்டப்பிரிவு சார்பில் சசைக்குரிய வகையில் கேலி சித்திரம் வெளியிட்ட பத்திரிகை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையரிடம், பாஜக சட்டப்பிரிவை சேர்ந்த அஸ்வத்தாம் அளித்த புகாரில், மேற்கண்ட ஆனந்த விகடன் 27.01.2021ஆம் தேதி வெளியான பத்திரிக்கையில் உலகத்தலைவர், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அவரை ஒரு ராட்ஷசன் போல சித்திரித்து, டெல்லியில் போராடும் போராட்டக்காரர்களை விவசாயிகளாக சித்தரித்து அவர்களை பிரதமர் சாப்பிடுவது போல , ஒரு கேடு கெட்ட சிந்தனையோடு கார்டூனை வரைந்து உள்ளனர்.

டெல்லியில் குடியரசு தினத்தன்று (26.01.2021) போராட்டக்காரர்களும், காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் மிகப்பெரிய கலவரங்களில் ஈடுபட்டனர். செங்கோட்டையிலே பறந்த தேசியகொடியையே அவமதித்து தேசத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தினர். பல இடங்களில் டிராக்டர்களை வைத்து மோதியும் , கத்தி, வாள் போன்ற கொடிய ஆயுதங்களைக் கொண்டும் காவல்துறையினரைக் கொல்ல முயற்சி செயதுள்ளனர். இந்த கலவரச் செயல்களை பாராட்டி “பாகிஸ்தான் சமூக வலைதளம் , செங்கோட்டையில் தேசியக்கொடியை இறக்கி விட்டு , காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டுள்ள போராட்டக்காரர்கள் , இது வரலாற்று சிறப்பு மிக்க நாள்” என சந்தோஷமாக பதிவிட்டு உள்ளது.

நம் எதிரி நாடான பாகிஸ்தானின் மனநிலைக்கு சற்றும் குறைவில்லாமல் , இன்னும் சொல்லப்போனால் , அதைவிட மோசமான ,குற்றமுறு மனத்தோடு மேற்கண்ட இந்த கார்டூன் வரையப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த செயல் , அரசுக்கு எதிராக பகை மூட்டும் நோக்கத்தோடு மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்பும் வகையிலும், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும் ,ஒரு பிரிவினரை தூண்டி , சினம் ஊட்டி, அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும், தேசத்தின் மாண்பு மற்றும் இறையாண்மையை குலைக்க தூண்டுதல், வலியுறுத்துதல், அந்த நோக்கத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்களுடைய நோக்கமும், குற்ற மனமும் தெளிவாக தெரிகிறது.

எனவே ஆனந்த விகடன் பத்திரிக்கை வெளியிட்டாளர், தலைமை ஆசிரியர் மற்றும் கார்டூனிஸ்ட் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 124(A), 153, 153(A), 153(B), 499, 504, 505 (1) , 505(2), 188 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என சசைக்குரிய வகையில் காவல் துறை மீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களுடன் செங்கோட்டையில் காலிஸ்தான் பயங்கரவாத கொடியை ஏற்றிய கலவரக்காரர்களுக்கு ஆதரவாக கேலி சித்திரம் வெளியிட்ட பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .