திமுகவினர் எனது முந்தானையை பிடித்து இழுத்தார்கள்.! சாப்பாடு தான் முக்கியம் என்றார் ஸ்டாலின்.! திருச்சியில் நடத்தது என்ன? உண்மையை உடைத்த குஷ்பு.!

0
Follow on Google News

நீண்ட வருடங்களுக்கு முன் திமுகவில் இருந்த போது தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி வெளியே பேசியுள்ளார், நடிகை குஷ்பு, அவர் திமுகவில் இருந்த போது திமுகவினர் அவர் வீட்டின் மீது கற்களை வீசினார்கள்,திருச்சியில் இருந்த குஷ்புவை சுற்றி வளைத்து ஒரு பெண் என்று கூட பார்க்காமல் செருப்பை வீசிய சம்பவம் கூட அரங்கேறியது, இது குறித்து தற்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை குஷ்பு கூறியதாவது.

திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது பற்றி ஜனநாயகபடி கட்சியின் பொதுக்குழுவில் தான் முடிவு எடுக்கப்படும் என அப்போதைய திமுக தலைவர் டாக்டர் கருணாநிதி அவர்கள் தெரிவித்திருந்தார், அதே கருத்தைத்தான் முன்மொழிந்து நானும் தெரிவித்தேன், இந்தக் கருத்தை நான் சொன்னதற்காக சென்னையில் உள்ள என் வீட்டின் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கூடி என் வீட்டின் மீது கற்களை வீசினார்கள்.

அப்போது திருச்சியில் நான் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்து இருந்தேன், அப்போது திருச்சியில் என் மீது திமுகவினர் செருப்பை வீசினார்கள், முந்தானையை பிடித்து இழுத்தார்கள், திமுகவில் இருக்கும் பெண்கள் என்னை மிக கீழ்தரமாக விமர்சனம் செய்தார்கள், அப்போது நான் கலந்து கொண்ட திருமண நிகழ்வுக்கு முக ஸ்டாலின் வந்திருந்தார் நான் அவரை பார்ப்பதற்காக அவரிடம் கெஞ்சினேன் கதறினேன்.

கதவை திறந்து விடுங்கள் நான் உங்களைப் பார்க்க வேண்டும் என்று கேட்டேன், ஆனால் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் அதனால் சந்திக்க முடியாது என்று கூறிவிட்டார், ஒரு கட்சியின் அடுத்த தலைவராக வரக்கூடியவர் ஒரு பெண் தனது குழந்தைகள் சென்னையில் தனியாக இருக்கிறார்கள் அவர்கள் இருக்கும் வீட்டின் மீது கற்களை வீசுகிறார்கள், அதனால் ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசவேண்டும் என நான் கேட்டபோது அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் அவரை சந்திக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.

ஒரு பெண்ணுக்கு நடந்த அவமானம் அனைத்தும் அவருக்கு தெரியும், எனது இரண்டு குழந்தைகள் ஒரு குழந்தைக்கு 8 வயது, மற்றொரு குழந்தைக்கு 10 வயது, தனியாக வீட்டில் இருக்கும் போது வீட்டின் மீது கல் வீசும் விஷயம் அனைத்து தொலைக்காட்சியிலும் செய்தியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தது, அதுவும் அவருக்கு தெரியும், ஆனால் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லக்கூடியவர் தலைவர் என்றால்.

ஒரு கட்சியின் தொண்டர், ஒரு பெண், ஒரு தாய் பார்க்க நேரமில்லை சாப்பாடுதான் முக்கியம் என்றால் தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார், இது குற்றச்சாட்டு அல்ல நூற்றுக்கு நூறு உண்மை என பாஜக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு தெரிவித்தார், திமுகவில் இருந்து அவர் விலகியதில் இருந்து தொடர்ந்து பத்திரிகையாளர்கள் திமுகவில் இருந்து விலக என்ன காரணம் என கேட்டபோது பல வருடங்களாக பதில் தர மறுத்து வந்த குஷ்பு தற்போது,ஒரு சில விஷயத்தை மட்டும் தெரிவித்துள்ளார்.