நொடிக்கு நொடி வீரியம் எடுக்கும் கொரோனா…இரண்டாம் அலையோடு நிற்கபோவதில்லை.! மருத்துவர்கள் எச்சரிக்கை.!

0
Follow on Google News

இந்தியாவில் கொரோனோ தாக்குதலின் இரண்டாம் அலை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதை அடுத்து மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன, கொரோன முதல் அலையை விட இரண்டாம் அலை அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே மருத்துவர்கள் எச்சரித்த நிலையில், தற்போது மிக வேகமாக கொரோனா இரண்டாம் அலை உருவெடுத்துள்ளது.‌

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த, இந்தியாவின் மருந்து உற்பத்தியோடு ரஷ்யாவிடம் இருந்து ஸ்புட்னிக் மருந்தையும் வாங்கி போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு வழங்க இந்திய அரசு முடிவெடுத்திருக்கின்றது. தற்போது உள்ள கொரோனா இரண்டாம் அலை குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், கொரோனா தடுப்பு மருந்து முழுக்க பாதுகாப்பானது என்றாலும் அதை செலுத்திகொண்டால் நோய் ஆபத்து குறைவு, அதற்காக அம்மருந்து ஆயுட்காலம் முழுக்க பாதுகாப்பை வழங்கும் என்பது தவறு என சுட்டிக்காட்டிய மருத்துவர்.

மேலும், கொரோனா தடுப்பு மருந்து 6 மாதம் முதல் 10 மாதம் வரை ஓரளவு பாதுகாப்பாக இருக்கலாம், கொரானா பரவலை தடுக்க, இப்போதைய ஒரே தீர்வு தடுப்பு மருந்து செலுத்துதலும் , நிர்ணயிக்கபட்ட கட்டுபாடுகளை பின்பற்றுதலுமன்றி வேறு தீர்வு அல்ல என எச்சரித்த மருத்துவர்,‌ உலகம் முழுக்க அதிவேகத்துடன் தலைவிரித்து போட்டு ஆடும் அந்த கொடிய நோய்க்கு இதுவரை மருந்தில்லை, ஒருவருடம் கடந்துவிட்டாலும் இன்னும் அதை முழுமையாக அழிக்க மருந்தில்லா நிலையில் ஆராய்ச்சிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.‌

கொரோனா ஆபத்து முழுக்க விலக இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகலாம் என கணக்கிடபட்டுள்ள நிலையில் இது இரண்டாம் அலையோடு நிற்கபோவதில்லை. நொடிக்கு ஒரு வடிவமும் வீரியமும் எடுக்கும் கொரோனா , ஒரு மருந்து வருவதற்குள் தன் வடிவை இயல்பை மாற்றி கொண்டே இருப்பதால் திகைத்து நிற்கிறது மருத்துவ உலகம், எனினும் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு நிச்சயம் உண்டு, மக்களின் முழு ஒத்துழைப்பு ஒன்றே இப்போதைக்கு பெருமருந்து அதை தவிர ஒன்றுமில்லை என மருத்துவர் தெரிவித்துள்ளார்.