தமிழக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணுவதெல்லம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப தமிழகத்தை உயர்த்துவோம் என்று ஸ்டாலின் சொல்வது தவறில்லை, வரவேற்கிறோம். ஆனால் Made in India விற்கு நிகராக Made in Tamilnadu எனச் சொல்லுவது அபத்தம். மற்ற மாநிலங்களுக்கு இடையே போட்டி இருக்கலாம் ஆனால், நாட்டையே தனக்கு நிகராக போட்டி என்பது பிதற்றல். மத்திய வணிகவரித்துறை ஏற்பாடு செய்த கூட்டத்தில் இவ்வாறு பேசியிருப்பது தான் வகிக்கும் பொறுப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் விரோதம்.
கொஞ்சம் திமுக வரலாற்றை திரும்பி பார்த்தோமேயானால் அவர்கள் தொழில்களை வளர்த்த கதை தெரியவரும். உள்நாட்டிலேயே மிக சிறப்பாக வாகனங்களை தயாரித்த ஸ்டான்டார்ட் மோட்டார் தமிழ்நாட்டில் தான் தயாரானது திமுக ஆட்சியில் அது மூடப்பட்டது. ஸ்டான்டர்ட் மோட்டார் தொழிற்சாலை மூடப்பட்டதால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். பெருகுஸன் டிராக்டர் சென்னையில் தயாராகிய உலகம் பூராவும் விற்பனைமானது. விவசாயிகளின் நண்பன். அதுவும் திமுக ஆட்சியில் மூடப்பட்டது தான்.
தொமுசவின் ஆதிக்கத்திற்கு எதிராக நிற்க முடியாத சிம்ஸன் நிர்வாகம் அந்த தொழிற்சாலையை ஆழ்வாருக்கு மாற்றியது. பின்னி மில் தயாரித்த Made in Tamilnadu துணிகள் உலகத்தில் பல கோடி வாடிக்கையாளர்களை கவர்ந்தது.திமுக தன் தொழிற் சங்கத்தை உள்ளே நுழைக்கும் முயற்சியால் பின்னி மில்லில் தொழிற்சங்க போராட்டம். அதனால் பின்னி மில் மூடப்பட்டது. Made in Tamilnadu துணிகள் உற்பத்தி நின்றது.
கோயம்புத்தூரில் பல ஆயிரம் பவுண்டரிகள் திமுக் ஆட்சிக்காலத்தில் மின்சார தட்டுப்பாட்டால் மூடப்பட்டது. தமிழகத்தின் முக்கிய தொழிற்சாலைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் மூடப்பட்டுவிட்டது. போராட்டம், ஆர்பாட்டம், லஞ்சம், ஊழல் என கைவரிசை காட்டியதன் விளைவு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு.
பல தொழிற்சாலைகள் தமிழகம் வர மறுத்து மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து விட்டு தொழில் முன்னேற்றம் என பேசுவது சொந்த கண்ணையே குத்துவது போல. நக்சல், பிரிவினைவாதம், தீவிரவாதம், போன்றவற்றை ஆதரிப்பவர்களை கூட வைத்துக்கொண்டு விடியல், வளர்ச்சியென்றால் யாரும் நம்ப தயாராக இல்லை என தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.