தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய நீண்ட நெடுநாள் கோரிக்கையான ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திடவும், அவர்கள் தற்போது இடம் பெற்றிருக்கக்கூடிய SCHEDULED CASTE என்ற பட்டியலினத்திலிருந்து விலக்கிடவும் தொடர்ந்து போராடிவருகின்றனர். அதில் ஒரு பகுதியாகிய பெயர் மாற்றக் கோரிக்கைக்கான சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்திருக்கிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் மற்றும் பட்டியல் வெளியேற்ற படவேண்டும் என எதிர்பார்ப்பில் இங்கும் அந்த சமூக மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது, இந்நிலையில் தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய நீண்ட நெடுநாள் கோரிக்கைகளுக்காக அவர்களுடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேவேந்திர தன்னார்வலர் அறக்கட்டடளையில் நிறுவனர் தங்கராஜ், இது குறித்து முதல் முதலில் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசனை சந்தித்து பேசியபோது, அவரை அழைத்து கொண்டு ஆடிட்டர் குருமூர்த்தி, மற்றும் தயானந்த சரஸ்வதி ஸ்வாமி ஆகியோரை சந்தித்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைத்தார் பேராசிரியர். இதனைதொடர்ந்து 2012ஆம் ஆண்டு மதுரையில் நடந்த இரண்டு நாள் தாமரை சங்கமம் மாநாட்டில், 7 உட்பிரிவுகளை ஒரே பெயராக தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என்கிற தீர்மான நிறைவேற்ற, அந்த தீர்மானத்தை தயார் செய்த்தவர் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு மதுரையில் நடந்த தேவேந்திரகுல மாநாட்டிற்கு ஆடிட்டர் குருமூர்த்தி உதவியுடன் அமித்ஷாவை அழைத்து சிறப்பு விருந்தினராக பங்குபெற வைத்தவர் பேராசிரியர், அந்த மாநாட்டில் தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கை அடங்கிய தீர்மானத்துக்கு முதலில் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தார் அமித்ஷா, அதன் பின்பு 2016 ஆம் ஆண்டு சுமார் 5 லட்சம் கையெழுத்து படிவங்கள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் அமித்ஷா ஏற்பாட்டில் 2015ஆம் ஆண்டு தேவேந்திரகுல சமூக பிரதிநிதிகள் 101 பேர் கொண்ட குழு டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது, இதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களிடம் இணைந்து அவர்களின் நீண்ட நாட்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன், தற்போது அவர்களின் கோரிக்கைக்கான சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சமர்த்திருப்பதில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு முக்கிய பங்கு உண்டு என தெரிவித்தவர், மேலும் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் பட்டியல் சமூக ஆணைய துணை தலைவர்களாக இருந்தபோது தமிழக முழுவதும் மக்களிடம் இது குறித்து கருத்து கேட்டது உட்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் என தெரிவித்தார் பேராசிரியர்.