இளம் பெண் சரஸ்வதியின் கொடூர கொலை காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்.! முக ஸ்டாலின் கண்டனம்.!

0
Follow on Google News

உளுந்தூர்பேட்டையில் இளம் பெண் சரஸ்வதி திருமணம் செய்ய மறுத்தார் என்பதற்காக மூன்று பேர் சேர்ந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது, இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறந்த அந்த பெண்ணின் தந்தை திமுகவை சேர்ந்தவர் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது, இதனை தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளனர்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலினி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், திருமணம் செய்ய மறுத்தார் என்பதற்காக உளுந்தூர்பேட்டை அருகே சரஸ்வதி எனும் இளம்பெண்ணை மூவர் சேர்ந்து கொலை செய்துள்ள வன்முறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தை மிரட்டி மாற்றிவிடலாம் என நினைப்பதும், அதற்காக கொலை வரை செல்வதும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம். இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும்.

மேலும்,சரஸ்வதியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு தருவதோடு, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனி நடக்காதவாறு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். என தெரிவித்துள்ளார், திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், உளுந்தூர்பேட்டை தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர் வீரமணியின் மகள் சரஸ்வதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிகள் எவரும் எந்த வழியிலும் தப்பிவிடாதவாறு கடுமையான நடவடிக்கையைக் காவல்துறை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் சகோதரியின் படிப்புச் செலவை மாவட்டக் கழகம் ஏற்கும் எனவும் சொல்லி இருக்கிறோம். வழக்கை நேர்மையாகவும் உறுதியாகவும் காவல்துறை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!