தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள பசும்பொன் நகரை சேர்ந்த கவிதாவை என்ற இளம்பெண்ணை செல்போன் பேசியதற்காக அண்ணணே அவரை சரமாரியாக வெட்டி கொன்று தப்பி ஓடி தலைமறைவானார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுடலை முத்து. இவர் ஒரு விவசாயி. சுடலை முத்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
மலைராஜா என்ற ஒரு மகனும் கவிதா உள்ளிட்ட மூன்று மகளும் இருக்கிறார்கள். இவரது மகனான மலைராஜா (20) மற்றும் மகளான கவிதாவை (17) தவிர மற்ற மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதில் கவிதா எப்போதும் செல்போனிலே அதிக நேரத்தை செலவிட்டு வந்தார். எந்த நேரமும் செல்போன் கையுமாக இருந்த கவிதாவை அண்ணன் பல முறை கண்டித்துள்ளார்.
ஆனால் கவிதா அண்ணன் பல முறை கண்டித்தும் மீண்டும் கேட்காமல் செல்போன் கையுமாக திரிய ஆத்திரமடைந்த அண்ணன் மலைராஜா வீட்டில் இருந்த அருவாளை எடுத்து தங்கை கவிதாவை ஆத்திரம் தீரும் வரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டார். இதில் வெட்டுப்பட்ட கவிதா சரிந்து விழுந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். உடனடியாக தகவல் அறிந்து அங்கு வந்த முறைப்பநாடு போலீசார் கவிதாவை மீட்டு நெல்லையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தங்கையை கொன்ற அண்ணன் மலைராஜா மீது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தலைமறைவானாரை தேடி வருகின்றனர். அண்ணணே தங்கை கொன்ற சம்பவம் சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது