திருச்சியில் காதலியை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய காதலன் அடுத்த கட்டமாக அந்த காதலியின் தாய், தங்கையின் ஆபாச படத்தையும் கேட்டு மிரட்டியுள்ளான். இந்த காமக்கொடூரனை போலீசார், 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து காதலியை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி வந்த காதலனை கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நண்பரான சதீஷ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு மொபைல் ஷாப்பில் வேலை கிடைத்துள்ளது. இவரது காதலனான சதீஷ்குமாருக்கும் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை கிடைத்துள்ளது. காதல் ஜோடிகள் இருவரும் காஞ்சிபுரத்தில் வேலை செய்வதால் வீட்டிற்கு தெரியவா போகுது என்று இவர்களுடைய நெருக்கம் அதிகரித்தது.
தனியாக வீடு எடுத்து திருமணமான கணவன் மனைவி போல் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை காதலன் சதீஷ்குமார் ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். சதீஷ்குமாருக்கு சலித்துப்போக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக காதலியிடம் கூறியுள்ளான். இதைக்கேட்ட காதலிக்கு மனம் நொந்து கதறி அழுதுள்ளார். நீ என்னுடைய திருமணத்திற்கு தடையாக இருந்தால் நாம் இருவரும் ஒன்றாக இருந்த ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பகிர்ந்து விடுவதாக காதலன் சதீஷ்குமார் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து சதீஷ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. சில நாட்கள் கழித்து மீண்டும் தனது முன்னாள் காதலியை செல்போனில் அழைத்து பேசி தன்னிடம் நெருக்கமாக இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுத்தால் என்னிடம் இருக்கும் உன்னுடைய ஆபாச வீடியோக்களை இணைத்தளத்தில் பதிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். வேறுவழியின்றி சதீஷ்குமார் சொல்வதை செய்து வந்துள்ளார்.
சதீஷ்குமார் என்ன சொன்னாலும் அதை வேறு வழியின்றி மறுக்காமல் செய்து வந்தார். இதை சதீஷ்குமாருக்கு மேலும் சாதகமாக போனது. சதீஷ்குமார் காதலியிடம் உன்னுடைய தாய் மற்றும் தங்கையின் அந்தரங்க படத்தை எடுத்து அனுப்புமாறு மிரட்டியுள்ளார். சதீஷ்குமாரின் மிரட்டலுக்கு பயந்து வேறு வழியின்றி தனது தாய் தங்கையின் அந்தரங்க படத்தை மறைமுகமாக எடுத்து அனுப்பியுள்ளார். தொடர்ந்து வீட்டிற்கு குட்டி போட்ட பூனை போல கையில் செல்போனுடன் உலாவந்த போது குடும்பத்தினர் பிடித்து விசாரித்தபோது கதறி அழுது உண்மையை கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த பெண்ணின் குடும்பத்தினர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சதீஷ்குமாரை பிடித்து விசாரித்து அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். அதன்பிறகு சதீஷ்குமார் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.