நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியை இழந்துள்ளது, சென்னை மற்றும் திருச்சியில் மொத்தமாக அதிமுக என்ற கட்சியே இருந்ததற்கு அடையாளமே கூட இல்லாமல் துடைத்து எறியப்பட்டுள்ளது, டெல்டா பகுதியில் சொற்ப எண்ணிக்கையில் தொகுதியை பெற்றுள்ளது, தென் மாவட்டத்தை போன்றே வட மாவட்டங்களிலும் இந்த தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளது அதிமுக.
ஆனால் கொங்கு மண்டலில் உள்ள கோவையில் முழு வெற்றியை பெற்றுள்ளது அதே போன்று எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டம் சேலத்தில் பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, தர்மபுரியில் உள்ள 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது, இந்நிலையில் கொங்கு மண்டலத்தை தவிர்த்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் தோல்வியை தழுவியுள்ளது அதிமுக,
இந்நிலையில் அதிமுக தோல்விக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், ஒரு குறிப்பிட்ட சமூகம் அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தி வருவது, திமுகவுக்கு எதிராக எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் வழி நடத்தப்பட்ட அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் இன்று ஒரு சாதி கட்சி என்கிற ஒரு வட்டத்துக்குள் சுருங்கி உள்ளதை தான் நடந்து முடிந்த தேர்தலும் அதற்க்கு பின் அந்த கட்சியில் நடந்து வரும் சம்பவங்களும் உணர்த்துகிறது.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்ற பின்,கட்சி அதிகாரத்தில் அவர் சார்ந்த கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமையும், கவுண்டர் சமூகம் பெரும்பான்மையாக இருக்க கூடிய கொங்கு மண்டலத்துக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் வழங்கி, மற்ற சமூகத்தையும், பிற மாவட்டங்களையும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி அரசியல் ரீதியாக புறக்கணித்து வருவதாக குற்றசாட்டு எழுந்து வந்தது.
இந்த குற்றசாட்டை நிரூபிக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது, இந்நிலையில் தற்போது நடந்த எதிர்கட்சி தலைவரை தேர்தெடுப்பதில் ஓபிஎஸ் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை முன்னால் சபாநாயகர் தனபாலை சபாநாயகராக முன் மொழிந்தார், ஆனால் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த முன்னால் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஆதிக்கம் அதிமுகவில் அதிமாக இருப்பதால் அவர்களின் தலையிட்டால் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடும் இழுபறிக்கு பின் எதிர்க்கட்சி தலைவர் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே இனி அதிகாரம் செலுத்த முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளதால், அதிமுக என்கிற மாபெரும் இயக்கம் இனி ஒரு சமூகத்துக்கான கட்சி என்கிற குறுகிய கொங்கு மண்டலத்துக்குள் சுருங்கி விடும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.