தாலிபான்களின் செயல் ஜனநாயகவாதிகளின் கடமை….தாலிபான்களுக்கு ஆதரவாக தோசை புகழ் மதிமாறன் கருத்து.

0
Follow on Google News

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஒவ்வொரு நகரமாக ஆப்கானிஸ்தான் முழுவதையும் தன் வசப்படுத்தியதைத் தொடர்ந்து இறுதியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்நகரையும் மற்றும் அதிபர் மாளிகையையும் தாலிபான்கள் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார்.மேலும் பல முக்கிய தலைவர்களும் நாட்டை விட்டு சென்றதைத் தொடர்ந்து தாலிபான் கிளர்ச்சிக் குழுவின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கானி பராதர் ஆப்கானிஸ்தனின் புதிய அதிபராகக்கூடும் என தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை வரவேற்று பிரபல பெரியாரிஸ்ட் மதிமாறன் கருத்து தெரிவித்துள்ளார், அவர் தெரிவித்ததாவது, ஆப்கான்-தாலிபான்-அமெரிக்க வெளியேற்றம் நான் வரவேற்கிறேன்.வியட்நாம்-கம்போடியாவிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியபோது அமெரிக்க விசுவாசிகளாக இருந்த உள்நாட்டுத் துரோகிகள் அமெரிக்க ராணுவத்தை விரட்டிய கம்யுனிஸ்டுகளைப் பார்த்து எப்படிக் கதறினார்களோ;

அதுபோல் ஆப்கனிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும்போது அமெரிக்க விசுவாச அதிகார வர்க்க ஆப்கானியர்கள் புலம்புகிறார்கள். அமெரிக்க அடியாள் ஆப்கான் அரசிற்கு மாற்றுத் தாலிபான்கள் இல்லையென்றாலும் ரஷ்யாவிற்கு எதிராகத் தனக்கு அடியாள் வேலை பார்ப்பதற்குப் பின்லேடன்-தாலிபான்களை உருவாக்கிய அமெரிக்காதான் தாலிபான்களின் ஜனநாயக விரோத செயல்களுக்கும் காரணம்.

அன்று ரஷ்யா ஆப்கானை விட்டு வெளியேறியபோது, தாலிபான்கள் பின்னணியில் ‘ஜனநாயகம் மீண்டு விட்டது’ என்று முழங்கிய முதாலாளித்துவ ஊடகங்கள்தான் இன்று ஜனநாயகம் செத்துவிட்டது என்று அமெரிக்காவிற்கு ஆதரவாக ஊளையிடுகிறார்கள். தன் மண்ணை இன்னொரு நாட்டு ராணுவம் ஆளுவதைச் சொரணையுள்ள எந்த மக்கள்தான் பொறுப்பார்கள்? தாலிபான்களின் அடிப்படைவாதம் ஏற்றுக் கொள்ளக்கூடடியதல்ல. ஆனால் அமெரிக்காவின் வெளியேற்றம் வரவேற்க வேண்டியது ஜனநாயகவாதிகளின் கடமை. நான் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.